டான்ஸ் ஷோவை நான் நம்ப மாட்டேன்..அங்கெல்லாம் பணம் தான் பேசும் பிரபல தொலைக்காட்சி குறித்து சாய் பல்லவி

First Published | Nov 4, 2022, 5:48 PM IST

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை நான் நம்ப மாட்டேன் திறமையானவர்களுக்கு எப்போதும் நடன நிகழ்ச்சிகள் மரியாதை கிடையாது என கூறுகிறார். 

Sai Pallavi

தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சாய் பல்லவி. தற்போது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மிகப் பிரபலமானவர். தனுஷின் மாரி 2 வில் பேபியாக இங்குள்ள ரசிகர்களின் மனதில் ஆளப்பதிந்து விட்டார். அந்த பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்றளவும் பிரபலமாகவே உள்ளது.

Sai Pallavi

முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்னும் ரியாலிட்டி ஷோ மூலமாக கலைத்துறைக்கு அறிமுகமானார்.இதில் இரண்டாவது வின்னர் ஆக வந்திருந்தார்.  பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. கஸ்தூரிமான், தாம் தூம் ஆகிய இரு படங்களில் தோன்றியுள்ளார் சாய்பல்லவி. ஆனால் அந்த படங்கள் இவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுக்கவில்லை.

Tap to resize

sai pallavi

பின்னர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் சாய்பல்லவியை மதிப்புமிக்க நாயகியாக மாற்றியது நிவின்பாலி  நாயகனாக நடித்த அந்தப் படத்தில் மலர் டீச்சராக வந்து இளைஞர்களின் மனதை வெகுவாகவே கவர்ந்து இழுத்து இருந்தார் சாய் பல்லவி.

குறுகிய காலத்தில் பல விருதுகளையும் தட்டிச் சென்றார். தொடர்ந்து தெலுங்கிலும் நடித்திருந்தார் இதன் பிறகு இவருக்கு தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு தியா என்னும் திரில்லர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் மொழிக்கு திரும்பி வந்தார்.

மேலும் சேய்திகளுக்கு....bharathi kannamma : ஒரு வழியாக என்டுக்கு வந்த வெண்பா கதை...ஷர்மிளா கொடுத்த ஷாக்..

இந்தப் படம் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருந்தது. பிள்ளையை இழந்த தாயாக தனது தவிப்பை கண்களால் வெளிக்காட்டி இருந்தார் சாய்பல்லவி. பின்னர் பல மொழிகளில் மாறி மாறி காட்சி அளித்த இவருக்கு மாரி 2 தான் சரியான இடத்தைப் பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

சாய்பல்லவி தொடர்ந்து என் ஜி கே பாவ கதைகள், சியாம் சிங்கராய் சமீபத்தில் கார்கி உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார். கார்கி படத்தில் தனது தந்தையை போலி புகாரில் இருந்து காப்பாற்றுவதற்காக போராடும் பெண்ணாக தோன்றியிருந்தார். இதன் வெளியீட்டு உரிமையை சூரியாவின் 2டி நிறுவனம் பெற்றிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் குறித்து பேசி இருந்த சாய் பல்லவி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை நான் நம்ப மாட்டேன் திறமையானவர்களுக்கு எப்போதும் நடன நிகழ்ச்சிகள் மரியாதை கிடையாது.

பொதுவாக தொலைக்காட்சியில் பணத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இல்லையென்றால் பிரபலத்தின் வாரிசுகளாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தான் மரியாதை கிடைக்கும். இதனால் தான் நடன போட்டிகளை நம்புவதில்லை மற்றும் அவற்றை வெறுக்கிறேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். ஒருவேளை விஜய் டிவிகள் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் நடனமாடிய இவர் இரண்டாவது வெற்றியாளராக வந்தது குறித்து தான் பேசுகிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

Latest Videos

click me!