விஜயகாந்த் பட கதையை திருடி... ஷாருக்கானுக்கு பட்டி டிங்கரிங் பார்த்த அட்லீ! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

First Published | Nov 4, 2022, 5:40 PM IST

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இயக்கியுள்ள 'ஜவான்' படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'பேரரசு' படத்தின் கதை என கூறி, தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து, பின் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவர் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வெற்றி பெற்ற நிலையில்.. இந்த திரைப்படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'மௌன ராகம்' படத்தின் கதையை திருடி எடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. மேலும் பலர் அப்போது எடுக்கப்பட்ட 'மௌன ராகம்' படத்தின் கதையை  தற்போதைய காலத்திற்கு ஏற்ற போல் அட்லீ இயக்கியுள்ளார் என தெரிவித்தனர்.
 

இதைத்தொடர்ந்து அட்லீ இயக்கத்தில்,  விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற போதிலும், 'தெறி' திரைப்படம் சரத்குமார் நடிப்பில் வெளியான 'சூரியன்' படத்தின் கதையை ஒற்றும், 'மெர்சல்' திரைப்படம் 'மூன்று முகம்' படத்தின் கதையை ஒற்றும் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது.

Yashoda Movie: சமந்தாவின் 'யசோதா' திரைப்படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!
 

Tap to resize

இப்படி தொடர்ந்து கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வந்த அட்லீ... 'பிகில்' பட வெற்றிக்கு பின்னர் சுமார் 4 வருடங்கள் கழித்து, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'பேரரசு' படத்தை கதையை திருடி தான், அட்லீ இயக்கியுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த 2006 ஆம் ஆண்டு, ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பேரரசு' படத்தின் கதை உரிமையை தற்போது செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணனிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

Bipasha Basu: 43 வயதில் நிறைமாத வயிற்றை காட்டியபடி புகைப்படம் வெளியிட்டு.. விஜய் பட நடிகை போட்ட சூப்பர் பதிவு!

 இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, 'பேரரசு' கதையை திருடி அட்லீ 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளதாக மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் ஃபிலிம் சாம்பருக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் மற்றும் பாலிவுட் திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பொதுவாக படம் வெளியான பின்னரே... அட்லீயின் படங்கள் விமர்சனந்திக்கு ஆளாகும் நிலையில், தற்போது படம் வெளியாவதற்கு முன்பே இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அட்லீ. இது குறித்து தற்போது வரை அட்லீ தரப்பில் இருந்தது எவ்வித பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Biggboss Elimination: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? எஸ்கேப்பான அசீம்..!
 

Latest Videos

click me!