இதுவரை ஏற்று நடித்திராத மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்திலும், அதிதீவிரமான ஆக்ஷன் காட்சிகளிலும் சமந்தா நடித்திருக்கும் திரைப்படம் 'யசோதா'. அதாவது, வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றி நடக்கும் மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, 'யசோதா' திரைப்படம் ஆக்ஷன் மற்றும் எமோஷன் கதையம்சத்துடன் உருவாகியுள்ளது.
வாடகைத்தாயாக சமந்தா நடித்திருக்கும் இந்தப் படத்தை, ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இயக்கி உள்ளனர். தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாகிறது. சமந்தாவை தவிர, இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'யசோதா’ திரைப்படம் சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், இந்த படத்திற்கு... தற்போது, யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகி, வெளியாக இருக்கக் கூடிய முதல் கதாநாயகியை மையப்படுத்தியப் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹீரோ அவதாரம் எடுத்த 'மாஸ்டர்' பட வில்லன் அர்ஜுன் தாஸ்!