43 வயதை எட்டியுள்ள, பாலிவுட் நடிகை பிபாஷா பாசு... நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் தங்களுடைய முதல் குழந்தையை வரவேற்க தயாராகியுள்ள நிலையில், அவ்வப்போது பிபாஷா தன்னுடைய தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக, கர்ப்பகால புகைப்படங்கள் சிலவற்றை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.