கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தனுஷின் 3 படம் மூலம் தனது கெரியரை தொடங்கிய அனிருத்துக்கு சினிமாவில் தொட்டதெல்லாம் தங்கம் தான். தொடர்ந்து ஏறுமுகத்துடனே பயணித்து வரும் அனிருத், தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றிவிட்டார். இதனால் இவருக்கு மவுசும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
24
தற்போது கூட இவர் கைவசம் அஜித்தின் ஏகே 32, ரஜினி நடிக்கும் ஜெயிலர், விஜய்யின் தளபதி 67, கமலின் இந்தியன் 2 என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்களையெல்லாம் தன்வசம் வைத்திருக்கிறார். இதுதவிர இந்தியில் அட்லீ இயக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திற்கும் இவர் தான் இசையமைத்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்துக்கு இசையமைக்க கமிட் ஆகி உள்ளார்.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பான் இந்தியா இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கும் அனிருத்திடம், லைகா நிறுவனம் தங்கள் தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ள இரண்டு படங்களுக்கும் இசையமைத்து தருமாறு அவரை அணுகி உள்ளது. இதற்கு அனிருத் ஓகே சொல்லாலும் அதற்கு அவர் கேட்ட சம்பளம் தான் சற்று அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
44
ரஜினியின் இரண்டு படங்களுக்கும் இசையமைக்க மொத்தமாக 10 கோடி ரூபாய் கேட்டாராம் அனிருத். இதுதான் லைகா நிறுவனத்தினரை சற்று ஜெர்க் அடைய செய்துள்ளது. அனிருத்தின் குருவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட ஒரு படத்திற்கு இந்த அளவு சம்பளம் வாங்கியதில்லையாம். அப்படி இருக்கையில் இவருக்கு இவ்வளவு தொகை கொடுத்து கமிட் செய்யுமா லைகா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.