சமீப காலமாகவே மதம் மற்றும் ஜாதி குறித்து பேசுவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பல பிரபலங்களும் இது குறித்து பேசுவதால் சர்ச்சையிலும் சிக்கி விடுகின்றனர். அந்த வரிசைகள் தற்போது இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஜாதி குறித்து பேசி இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியிருந்தவர் பிரதீப் ரங்கநாதன். வாட்சப் காதல் என்னும் குறும்படத்தின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர்.
இதை தொடர்ந்து காஜல் அகர்வால், ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. தற்போது லவ் டுடே என்னும் படத்தை இயக்கி, நாயகனாக அறிமுகமாகிறார் பிரதீப். திரையரங்குகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.