Sobhita Dhulipala
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், நடிகை ஷோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திருமண புகைப்படங்கள் இல்லையாம். அது விளம்பரத்திற்காக அவர் பதிவிட்ட பதிவாம்.