கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் சார்பில் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றவர், நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை கைப்பற்றிய பின்னர், பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்த துவங்கினார். அந்த வகையில் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான், ரித்திக் ரோஷன், ரன்வீர் சிங், போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். மேலும் ஹாலிவுட் திரையுலகிலும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா குறித்து, முன்னாள் 'மிஸ் பார்படாஸ்' அழகி லீலானி மெக்கோனி, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக வைத்துள்ள குற்றச்சாட்டுகள், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்ற போது, ஸ்பான்சராக இருந்தது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தான் என்றும், இதன் மூலம் அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக நீச்சல் உடை, புடவை, மற்றும் பல்வேறு மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்ய பிரியங்கா சோப்ராவிற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், மேலும் உலக அழகி பட்டம் அவருக்கு தான் செல்ல போகிறது என்ற தகவலை ஏற்கனவே அவர் அறிந்திருந்ததாகவும் கூறி லீலானி மெக்கோனி குற்றம் சாட்டியுள்ளார்.
Hansika Marriage: தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாகும் ஹன்சிகா..! வெளியான ஷாக்கிங் தகவல்!
எனவே பல்வேறு தில்லு முல்லுக்கு இடையில் தான் பிரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை முறைகேடாக பெற்றார் என்று, லீலானி மெக்கோனி கூறியுள்ளது தற்போது திரையுலகினர், மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.