64 வயதில் ரகசியமாக 3-வது திருமணம் செய்துகொண்டாரா வாரிசு பட அம்மா நடிகை? - வெளியான உண்மை பின்னணி

Published : Jan 15, 2023, 10:49 AM IST

வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவி வரும் நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

PREV
14
64 வயதில் ரகசியமாக 3-வது திருமணம் செய்துகொண்டாரா வாரிசு பட அம்மா நடிகை? - வெளியான உண்மை பின்னணி

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் வடே ரமேஷ் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் ஜெயசுதா. இதையடுத்து நிதின் கபூர் என்பவரை கடந்த 1985-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டார் ஜெயசுதா.

24

இந்த தம்பதிக்கு நிஹார், ஷ்ரேயன் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் கடந்த 2017-ம் ஆண்டு மரணமடைந்தார். கணவரின் மரணத்துக்கு பின் மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார் ஜெயசுதா, அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் மாஸ் காட்டிய விஜய்... வாரசுடு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளது தெரியுமா?

34

இதனிடையே நடிகை ஜெயசுதா, மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் ஒன்று பரவி டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு காரணம் அவர் சமீபத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்த வாரிசு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருடன் வந்து கலந்துகொண்டார். அவர் தான் ஜெயசுதாவின் மூன்றாவது கணவர் என தகவல் பரவி வந்தது.

44

இந்நிலையில், தன்னுடைய மூன்றாவது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயசுதா. அந்த நபர் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் அவர் தன்னுடன் பயணித்து வருவதாகவும் தெரிவித்து திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயசுதா.

இதையும் படியுங்கள்... வாரிசு படம் பார்த்து ஆனந்தக் கண்ணீர்விட்ட தந்தை... நெகிழ்ந்துபோன இயக்குனர் வம்சி - வைரல் வீடியோ

Read more Photos on
click me!

Recommended Stories