நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுவதால், அப்போ வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் நிலைமை என்ன ஆனது என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது.
சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் சூர்யாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சூர்யா. அப்படத்தின் பணிகள் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
24
சிறுத்தை சிவா இயக்கும் படத்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் சூர்யா. இதையடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் தான் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் ஒரு டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.
தற்போது நடிகர் சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியிடம் கதை ஒன்றை கேட்டுள்ளாராம். இந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் இயக்கத்தில் சூர்யா நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார். இதில் ஜல்லிக்கட்டு படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. மம்முட்டி, ரம்யா பாண்டியன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து சூர்யா படத்துக்கான பணிகளை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
44
நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுவதால், அப்போ வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் நிலைமை என்ன ஆனது என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் மட்டும் இதுவரை நடைபெற்றுள்ளது. அதன்பின் இப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.