இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் அடுத்த படத்தை துவங்குவதற்கு முன்னதாக சபரிமலைக்கு சென்றுள்ள நிலையில், இவர் பொன்னியின் செல்வன் நடிகர்களுடன் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன், பொன்னியின் செல்வன் பட நடிகர், ஜெயராம், ஜெயம் ரவி, உள்ளிட்ட சிலருடன் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு சென்ற வீடியோக்கள் வெளியானது.
24
மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன், சபரிமலைக்கு செல்லும் வாழையில் நின்று கொண்டு, எடுத்துக்கொண்ட போட்டோவையும், சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலானது.
இந்நிலையில் நடிகர் ஜெயராமுடன், விக்னேஷ் சிவன், ஜெயம் ரவி, ஆகியோர் சிலருடன் சபரி மலையில் சுவாமி தரிசனம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
44
ஏற்கனவே துணிவு படத்தை ரிலீஸ் செய்த கையேடு, இயக்குனர் எச்.வினோத் சபரிமலைக்கு சென்றுள்ள நிலையில், அவரை தொடர்ந்து, அடுத்தடுத்து நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள் சபரி மலைக்கு படையெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.