தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை துவங்கியவர் நடிகை மீனா. ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா.
26
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் ஹீரோயின் ஆகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.
திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர், 90களைச் சேர்ந்த பல நடிகைகள் திரையுலகை விட்டு விலகிய நிலையில், நடிகை மீனா திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.
46
இவரை போலவே இவனுடைய மகள் நைனிகாவும் தளபதி விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நைனிகா, தற்போது தீவிரமாக தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வருவதால் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை மீனாவின் கணவர் சாகர் உடல்நல குறைவு காரணமாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பல மாதங்களாக வெளியுலகிற்கு வராமல் இருந்த இவரை, அவருடைய தோழிகளான, ரம்பா, ப்ரீத்தா, காலா மாஸ்டர் ஆகியோர் தான் வெளியே கொண்டு வந்தனர்.
66
இந்நிலையில் நைனிகா தன்னுடைய 12 வது பிறந்த நாளை, நைனிகா ஜனவரி 1 ஆம் தேதி எளிமையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நைனிகாவின் பாட்டி மீனா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது கலா மாஸ்டர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் நைனிகாவுக்கு ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.