பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11 ஆம் தேதி வெளியான துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்கள் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கியுள்ள 'துணிவு' திரைப்படமும், தெலுங்கு இயக்குனர் 'வம்சி' இயக்கத்தில் உருவாக்கியுள்ள விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.
27
கோலிவுட் திரையுலகில், உச்சகட்ட நட்சத்திரங்களாக இருக்கும்... அஜித் - விஜய் ஆகிய இருவரின் திரைப்படமும் , ஒரே நாளில் வெளியாவதால் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையேயும், வாரிசு - துணிவு ஆகிய இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ஜனவரி 12, 13, 18 ஆகிய தேதிகளில் இரண்டு படங்களுக்குமே கூடுதல் சிறப்பு காட்சிகளை வெளியிட அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை நாட்களில், இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு இருக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
47
தமிழகம் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் துணிவு - வாரிசு ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த பொங்கல் ரேஸில் விஜயை விட அஜித்தின் துணிவு படம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இது கூட்டிட்டு தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மூன்றே நாட்களில் உலக அளவில் துணிவு திரைப்படம் 100 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.
உலக அளவில் முதல் நாளில் 50.20 கோடியும், இரண்டாவது நாளில் 28.18 கோடியும், மூன்றாவது நாளில் 24.76 கோடி என மொத்தம் 103.14 கோடி வசூலித்துள்ளது.
67
இதைத் தொடர்ந்து வாரிசு படம் வசூல் குறித்து வெளியாகி உள்ள தகவலில், முதல் நாளில் 39 .65 கோடியும், இரண்டாவது நாளில் 20.39 கோடியும், மூன்றாவது நாளில் 18.41 கோடி வசூலித்துள்ளது.
வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு, தமிழக ரசிகர்கள் மத்தியில் ஒரே மாதிரியான வரவேற்பு கிடைத்து வந்தாலும்... வெளிநாடுகளில் 'வாரிசு' படத்தை விட 'துணிவு' படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்து வருவது தான் 3 நாட்களிலேயே துணிவு 100 கோடியை எட்ட காரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.