வனிதா விஜயகுமார் - ராபட்டுக்கு சுப முகூர்த்தம் குறிச்சாசு; திருமண கோலத்தில் வெளியிட்ட தகவல்!

Published : Feb 13, 2025, 11:12 AM ISTUpdated : Feb 13, 2025, 01:01 PM IST

வனிதா விஜயகுமார்,  நடன இயக்குனர் ராபட்டுடன் திருமண கோலத்தில் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
15
வனிதா விஜயகுமார் - ராபட்டுக்கு சுப முகூர்த்தம் குறிச்சாசு; திருமண கோலத்தில் வெளியிட்ட தகவல்!
திருமணத்திற்கு பின் சினிமாவுக்கு முழுக்கு போட்ட வனிதா

வாரிசு நடிகையான வனிதா விஜயகுமார், திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் ஹீரோயினாக கம் பேக் கொடுத்த, 'எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்' படத்தை தயாரித்து ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தை நடன இயக்குனர் ராபர்ட் தயாரித்து, ஹீரோவாக நடித்த நிலையில், இந்த படம் படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் போது வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் படத்தின் தோல்விக்கு பின்னர் ராபர்ட் இதை மறுத்தார்.

25
வாய்ப்பு கிடைக்காமல் இருந்த வனிதா

இதன் பின்னர் வனிதா விஜயகுமாருக்கு பெரிதாக எதுவும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வத்திக்குச்சி வனிதா என பெயர் எடுக்கும் அளவுக்கு பல சண்டைகளை கொளுத்தி போட்ட, இவர் 21 நாட்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் வனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது சொன்ன விஷயங்கள் ஒவ்வொன்றாக நடந்த நிலையில், ஒரு சில ரசிகர்கள் மீண்டும் வனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் வரவேண்டும் என கூறினர்.

ஃபுல் ஃபாமில் வனிதா; ராபட்டுடன் பெட் ரூம் சீன்! வெளியானது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் டீசர்!
 

35
திருப்புமுனையை ஏற்படுத்திய பிக்பாஸ்

இதை தொடர்ந்து, 50-ஆவது நாளில் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த வனிதா விஜயகுமார்... 84-ஆவது நாளில் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி சில ஹீரோ - ஹீரோயின்களை கைவிட்டிருந்தாலும் வனிதா விஜயகுமார் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர காரணமாக அமைந்தது. அதன் படி அடுத்தடுத்து சில ரியாலிட்டு நிகழ்ச்சிகள், சீரியல் மற்றும் திரைப்பட வாய்ப்பை கைப்பற்றி நடிக்க துவங்கினார். 

45
வனிதா விஜயகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்

கடந்த ஆண்டு இவர் நடிப்பில், ஹாரா, அந்தகன், உள்ளிட்ட 4 படங்கள் ரிலீஸ் ஆனா நிலையில், தற்போது மீண்டும் ஒரு தயாரிப்பாளராக மாறி, இவரே இயக்கி ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் தான் Mrs & Mr. இந்த படத்தை ஜோவிகா விஜயகுமார் வழங்குகிறார். வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக, நடன இயக்குனர் ராபர்ட் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். 

பப்பில் செம்ம வைப் மோடில் வனிதா விஜயகுமார்; ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ்!

55
Mrs & Mr திரைப்படத்தின் ட்ரைலர்?

மேலும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம்  வெளியாகி, வைரலான நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி Mrs & Mr திரைப்படத்தின் ட்ரைலர் நாளை ஐந்து 5:55 மணிக்கு வெளியிட உள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுப முகூர்த்தம் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார் வனிதா. இதில் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் இருவரும் மணமக்கள் கோளத்தில் உள்ளனர்.

ரசிகர்களும் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை வனிதா விஜயகுமாருக்கு தெரிவித்து வருகின்றனர்.  தினம் இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை ஸ்டார் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories