Sivakarthikeyan Love Failure : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்தது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது டாப் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளிவந்தது. கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அமரன் படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உருவெடுத்தார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் வெற்றிக்கு பின் இரண்டு பிரம்மாண்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் எஸ்.கே.
25
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
அதில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே.24 என பெயரிடப்பட்டு உள்ளது. அப்படத்தின் டைட்டில் வருகிற பிப்ரவரி 17ந் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதுதவிர சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஸ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
45
சிவகார்த்திகேயன் காதல் தோல்வி
இப்படி செம பிசியான ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்தது பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார். அதன்படி அவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தாராம். ஆனால் அது ஒன் சைடு லவ் என்பதால் கைகூடாமல் போயிருக்கிறது. அந்த பெண் அவரது லவ்வரோடு சென்றுவிட்டதால் அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டதாம். தன் வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு காதல் அதுதான் என கூறியுள்ளார்.
55
சிவகார்த்திகேயன் ஒன் சைடு லவ்
தான் விஜய் டிவியில் வேலை பார்க்கும் போது அந்த பெண்ணை ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் பேசவில்லையாம். ஆனால் அந்த பெண் முன்பு காதலித்த பையனோடு இல்லாமல் வேறு ஒரு நபருடன் வந்திருந்தாராம். இதைப்பார்த்ததும்,. நமக்கு கிடைக்காத பெண் அவனுக்கும் கிடைக்கவில்லை என சந்தோஷப்பட்டதாக சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். அதன்பின்னர் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டாராம் சிவகார்த்திகேயன்.