சிம்பு - நயன்தாரா என்று சொன்னதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர்களின் காதல் கதை தான். அதன்படி வல்லவன் படத்தில் நடித்தபோது நடிகர் சிம்பு மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் படுக்கையறையில் லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்துக்கு பின் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
24
சிங்கிளாக இருக்கும் சிம்பு
நயன்தாரா உடனான காதல் தோல்விக்கு பின்னர் நடிகை ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. இந்த காதலும் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. இப்படி சிம்புவை காதலித்த இரண்டு நடிகைகளுக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. ஆனால் நடிகர் சிம்பு மட்டும் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். அவருக்கு எப்போ திருமணம் என்கிற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அவரும் தற்போது நடிப்பில் பிசியாக உள்ளதால் தற்போதைக்கு திருமணம் செய்ய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் வல்லவன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடிகை நயன்தாரா செய்த சேட்டைகள் பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன் படி வல்லவன் பட ஷூட்டிங் சமயத்தில் ஸ்பாட்டுக்கு வந்திருந்த தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனின் போனை எடுத்து சிம்புவும், நயன்தாராவும் அதில் இருந்த நடிகை கோபிகாவின் நம்பருக்கு ‘ஐ லவ் யூ’ என மேசேஜ் அனுப்பி இருக்கிறார்கள்.
44
ஷாக் ஆன தயாரிப்பாளர் தேனப்பன்
பின்னர் மறுநாள் அந்த மெசேஜை பார்த்த கோபிகா, தயாரிப்பாளர் தேனப்பனுக்கு போன் போட்டு, என்ன சார் இப்படியெல்லாம் மெசேஜ் அனுப்புறீங்க என கேட்டிருக்கிறார். என்ன நடந்தது என தெரியாமல் குழம்பிப் போன தேனப்பன், பின்னர் போனை பார்த்த போது தான் ஐ லவ் யூ என மெசேஜ் இருப்பது தெரியவந்துள்ளது. இதைப்பார்த்து ஷாக் ஆன தேனப்பன், சிம்புவும், நயன்தாராவும் தான் இந்த வேலையை பார்த்திருக்கிறார்கள் என கோபிகாவிடம் கூறி சமாளித்திருக்கிறார். இப்படி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவும், நயன்தாராவும் சேட்டை செய்துகொண்டிருப்பார்கள் என கூறி இருக்கிறார்.