அப்பாவாக போகும் சன் டிவி சீரியல் ஹீரோ! மனைவியின் 5 மாத பேபி ஷவர் போட்டோசை பகிர்ந்த கார்த்தி!

Published : Oct 13, 2024, 07:14 PM ISTUpdated : Oct 13, 2024, 07:17 PM IST

சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் கடந்த ஆண்டு தன்னுடைய காதலி காயத்ரியை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது விரைவில் தந்தையாக உள்ள தகவலை அறிவித்துள்ளார்.  

PREV
14
அப்பாவாக போகும் சன் டிவி சீரியல் ஹீரோ! மனைவியின் 5 மாத பேபி ஷவர் போட்டோசை பகிர்ந்த கார்த்தி!
Ashwin Karthik

நடிகர் அஸ்வின் கார்த்திக்,  விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். ஆனால் இந்த சீரியலில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்ல.  அடுத்தடுத்து சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குல தெய்வம், அரண்மனை கிளி, மனசு,உள்ளிட்ட பல சீரியல்களில் கேரக்டர் ரோலில் நடித்தார்.

24
Ashwin Karthik wife is Pregnant

இந்த ஆண்டு நிறைவடைந்த, சன் டிவி தொடரான 'வானத்து போல' சீரியலில் ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரத்திரம் எதிர்மறையாக காட்டப்பட்டாலும் பின்னர் பாசிட்டிவாக மாறியது. கார்த்திக் இந்த சீரியலின் ஹீரோவாகவும் மாறினார். மேலும் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில்... கூடிய விரைவில் அடுத்த சீரியலில் நடிக்க உள்ளார்.

இளையராஜா இசையில் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?

34
Makeup Artist Gayatri

அஸ்வின் கார்த்தி கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பிரபலங்களுக்கு மேக் அப் ஆர்டிஸ்ட்டாக இருந்த காயத்ரி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

44
Serial Hero Shared Good News

இதை தொடர்ந்து தற்போது காயத்ரி 5 மாத கர்ப்பமாக உள்ளார். முதல் முறையாக 5 மாத வளையல் பூட்டு பூ முடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த சந்தோஷமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை கார்த்திக் மற்றும் காயத்ரி ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

சரியான நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்தும்... எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய வாலி! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories