இளையராஜா இசையில் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?

Published : Oct 13, 2024, 04:59 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும், ஸ்டைலிலும் அசத்துவார் என்பது நமக்கு தெரியும்... ஆனால் ஒரே ஒரு பாடலும் பாடி அசத்தியுள்ளார்.  பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆன அந்த பாடல் பற்றி உங்களுக்கு தெரியுமா?  

PREV
15
இளையராஜா இசையில் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?
Rajinikanth Movie

73 வயதிலும், நடிப்பு, ஆக்ஷன், ஸ்டைல் என கோலிவுட் திரையுலகை கலக்கி கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் படங்களுக்கு தமிழகத்தில் மட்டும் அல்ல உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பாலிவுட் திரையுலக நடிகர்கள் மத்தியிலும்... ரஜினிகாந்துக்கு தனி மரியாதை உள்ளது. 80-களில் சில பாலிவுட் படங்களில் ரஜினிகாந்த் நடித்தாலும், பின்னர் முழுக்க முழுக்க தமிழில் கவனம் செலுத்த துவங்கினார். 
 

25
Vettaiyan Movie Review

அதே போல் ரஜினிகாந்துடன் ஒரே ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதே தங்களின் கனவு என, பல பாலிவுட் நடிகர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர். கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் வேட்டையன் படத்தில் கூட, ரஜினிகாந்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அதே போல் மலையாள முன்னணி நடிகரான பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா ஆகியோர் நடித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆளு மட்டும் இல்ல... வசதியிலும் வெயிட் பார்ட்டியாக இருக்கும் ரவீந்தர் யார் தெரியுமா?
 

35
Rajinikanth is collection King

70 வயதை கடந்த பிறகும், நடிப்பில் இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வரும் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.  அதற்க்கு வேட்டையன் படமும் விதிவிலக்கு அல்ல. 
 

45
Rajinikanth mannan movie

ரஜினிகாந்த் நடிப்பை தாண்டி, கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்பது நாம் அறிந்தது தான். ஆனால் இவர் இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் ஒரே ஒரு பாடல் மட்டுமே ரஜினிகாந்த் பாடி இருந்தாலும் அந்த பாடல் வேற லெவல் ஹிட் அடித்த பாடல் ஆகும்.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், சிவாஜி ப்ரொடக்ஷன் தயாரிப்பில்... ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'மன்னன்'. இப்படம் 1986-ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான 'அனுராகா அரளித்து' என்கிற படத்தின் ரீ-மெக்காக எடுக்க பட்டிருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக விஜயசாந்தி நடித்திருந்த நிலையில், மற்றொரு நாயகியாக குஷ்பூ நடித்திருந்தார். 

சரியான நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்தும்... எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய வாலி! ஏன் தெரியுமா?

55
Rajinikanth Sung Song Adikuthu Kuliru Song

முக்கிய வேடத்தில் கவுண்டமணி, மனோரமா, விசு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காதல் காமெடி எமோஷன், என ஜனரஞ்சகமான கதைக்களத்தில் இருந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில்... மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த படத்தில் இடம்பெற்ற ரொமான்டிக் பாடலான 'அடிக்குது குளிரு' என்கிற பாடலை தான் இசை ஞானி இளையராஜா இசையில் மயக்கும் குரலில், ஜானகியுடன் இணைந்து பாடி இருந்தார் ரஜினிகாந்த். இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது போல் இந்த பாடலும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories