
Kannadhasan Song in Visu Movie: கவிஞர் கண்ணதாசன் பற்றி அறியாதவர் இந்த உலகத்தில் எவரேனும் உண்டா என்று கேட்கும் அளவிற்கு பிரபலமானவர் கவிஞர் கண்ணதாசன். இவரது பெயரையும், புகழையும் இவர் எழுதிய பாடல்களே சொல்லும். அந்தளவிற்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். இவரைப் பற்றி எத்தனை முறை எழுதிக் கொண்டே இருந்தாலும் இன்னும் ஏதேனும் இருந்து கொண்டே இருப்பது போன்று தோன்றும்.
அந்தளற்கு படங்களிலும் சரி, இலக்கத்திலும் சரி பணியாற்றியிருக்கிறார். எல்லோருமே பாடலாசிரியர்களாக இருக்கின்றனர். ஆனால், கண்ணதாசனின் வரிகளில் உள்ள அழுத்தமும் கருத்தும் மற்ற பாடலாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. கதை சொல்லிக் கொண்டே இருக்கும் போதே அந்த கதைக்காக வரிகளை ஒரே பாடலாக எழுதிக் கொடுப்பதில் ஜித்தனுக்கும் ஜித்தன். அப்படி ஒரு சம்பவம் தான் இயக்குநரும், நடிகருமான விசுவிற்கு நடந்தது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
இயக்குநர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் குடும்பம் ஒரு கதம்பம். இந்தப் படத்திற்கு டயலாக் எழுதியவர் விசு. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
மேலும், பிரதாப், சுஹாசினி, சுமலதா, எஸ்வி சேகர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். விசுவின் குடும்பக் கதையில் இந்தப் படமும் ஒன்று. டயலாக் எழுதுவதை அவரை மிஞ்ச முடியாது. தமிழில் வெற்றி பெற்று இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். கவிஞர் வாலி மற்றும் கவிஞர் கண்ணதான் பாடல் வரிகள் எழுதி கொடுத்தனர்.
இந்தப் படத்தில் குடும்பம் ஒரு கதம்பம், கல்வியில் சரஸ்வதி மற்றும் எங்காத்து மாப்பிள்ளை நீ என்று 3 படங்கள் இடம் பெற்றிருந்தது. இதில், கல்வியில் சரஸ்வதி மற்றும் எங்காத்து மாப்பிள்ளை ஆகிய பாடல்களுக்கு வாலி தான் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் எடுத்துக் கொண்டிருந்த போது இயக்குநர் எஸ்பி முத்துராமன், விசுவை அனுப்பி கவிஞர் கண்ணதாசனிடம் பாடல் வரிகள் வாங்கி வர அனுப்பியிருக்கிறார்.
அதற்கு விசுவும் கிளம்பி கண்ணதானை பார்க்க வந்திருக்கிறார். வந்தவர் பாடலுக்கான சீன் என்ன என்று தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், கவிஞரோ அவர் சொல்வதையெல்லாம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அங்கு அமர்ந்திருந்த தனது நண்பர் எம்.எஸ்.வியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இவரு தான் கோவக்காரராச்சே, உடனே சீன் சொல்வதை நிறுத்தியிருக்கிறார்.
ஏன் நிறுத்திவிட்டாய் கதையை மேல சொல்லு என்று கவிஞர் குரல் கொடுத்திருக்கிறார். கதையை தொடர இறுதியில் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதி கொடுத்திருக்கிறார். அப்படி உருவானது தான் குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம் தினமும் மதி மயங்கும் பல எண்ணம் பல எண்ணம் தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை குழந்தை ஒரு பாதை காலம் செய்யும் பெரும் லீலை….என்ற பாடல்.
இதைப் பார்த்த விசுவிற்கே ஆச்சரியம். ஒட்டு மொத்த கதையையும் ஒரே பாடலில் சொல்லிட்டாரே என்று….ஒரு சில இடங்களில் விசுவிற்கு சந்தேகம் ஏற்படவே அதற்கான விளக்கத்தை சொல்லியிருக்கிறார் கண்ணதாசன். கல்வி கலைமகளே கவிஞர் கண்ணதாசனை படைத்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை. அவர் மூலமாக மக்களுக்கு நல்ல நல்ல கருத்துள்ள காலத்தால் அழியாத பாடல்களை கொடுக்க செய்திருக்கிறார் சரஸ்வதி தேவி….