ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில், 4 முதல் 6 படங்கள் வரை வெளியாவது வழக்கம் தான். ஆனால், முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என்றால் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் பின்வாங்கி விடுவது உண்டு. இதற்க்கு காரணம் ஆடியன்ஸ் பெரிய நடிகர்களின் படங்களை பார்க்க காட்டும் ஆர்வத்தை வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு காட்ட மாட்டார்கள் என்பது ஒரு காரணம் என்றால்... தியேட்டர் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது என்பது மற்றொரு காரணம்.
இந்த வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு, ரஜினிகாந்தின் 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியான நிலையில், அக்டோபர் 11-ஆம் தேதி அன்று, நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக்' திரைப்படம் வெளியானது. 'பிளாக்' திரைப்படம் குறைவான திரையரங்குகளில் வெளியான நிலையில்... இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், தியேட்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் 'வேட்டையன்' திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு செம்ம வேட்டையாக அமைந்தாலும், வரும் வாரம், அதாவது அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள 5 தமிழ் படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவை எந்தெந்த படங்கள் என்பதை இதில் பார்க்கலாம்.