
Vettaiyan Climax Scene: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம் வெளியாகி வசூல் குவித்து வருகிறது. ஆனால் கிளைமேக்ஸ் படத்தில் காட்டியபடி இல்லாமல் இப்படி இருந்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் படங்களுக்கு பிறகு இயக்குநர் டி ஜே இயக்கத்தில் உருவான படம் வேட்டையன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராவ் ரமேஷ், அசல் கோலார், ரக்ஷன், அபிராமி, ரோகினி, ரித்திகா சிங் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
சரஸ்வதி பூஜை தினத்தை முன்னிட்டு 10 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் 3 நாட்களில் ரூ.145 கோடி வசூல் குவித்துள்ளது. 2 நாட்கள் முடிவில் ரூ.110 கோடி வசூல் குவித்திருந்த வேட்டையன் 3ஆவது நாள் முடிவில் ரூ.35 கோடி குவித்து ஒட்டுமொத்தமாக ரூ.145 கோடி வசூல் அள்ளியுள்ளது. கல்வி கதையை மையப்படுத்தி போலீஸ் ஆக்ஷனில் கலக்கிய இயக்குநர் டி ஜே ஞானவே தான் சொல்ல வந்ததை ரஜினியை வைத்து சொல்லிவிட்டார்.
பரபரப்புக்கும், ஆக்ஷனுக்கும் பஞ்சமே இல்லாத வகையில் படத்தை கொண்டு வந்த இயக்குநர் கடைசியில் ரித்திகா சிங்கின் காதல் கதையை மட்டும் மறைத்துவிட்டார். கடைசியில் ரித்திகா சிங் காதலை வெளிப்படுத்தி பகத் பாசிலுடன் சேர்த்து வைத்திருந்தால் படம் இன்னமும் மாஸாக இருந்திருக்கும். காதல் ஜோடிகளும் படத்தை கொண்டாடியிருப்பார்கள்.
அதோடு, பகத் பாசில் கேரக்டரையும் கிளைமேக்ஸிற்கு முன் கூட்டியே முடித்துவிட்டார். இதற்கான காரணம் குறித்து அவர் குறிப்பிடவில்லை. ஆரம்பம் முதலே ரஜினியுடன் ஒன்றியே வந்த பகத் பாசிலின் கேரக்டர் படத்திற்கு பிளஸ் பாய்ண்டாகவே இருந்தது. ரஜினிகாந்த் மற்றும் பகத் பாசில் இருவருக்காகவும் படத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியர் காம்போவை விட பகத் பாசில் மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷன் தான் படத்தில் அதிகம். பகத் பாசிலை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கேரக்டரை தேவையில்லாமல் முடித்துவிட்டார். அதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது. பகத் பாசில் சுடப்படும் சீன் முதல் படத்தின் கிளைமேக்ஸ் இப்படி இருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லப்படும் சீன் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
வேட்டையன் கிளைமேக்ஸ் சீன்:
துஷாரா விஜயனின் வாக்குமூல வீடியோ கிடைத்தவுடன் பகத் பாசில் ஆசைப்படி ரஜினியை அவர் கட்டிப்பிடிக்கிறார். அதனை பார்த்து ரித்திகா சிங் மெய்சிலிர்க்கிறார். பின்னர் பகத் பாசில் தனது மகிழ்ச்சியை ரித்திகா உடன் பகிர்ந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து ராணா டகுபதி கைது செய்யப்படுகிறார். அவரை கோர்ட்டுக்கு கொண்டு வரும் வழியில் அவர் தப்பித்து சென்றுவிடுகிறார்.
அதன் பிறகு ரஜினிகாந்த் மற்றும் பகத் பாசில் இருவரும் ராணா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ததோடு, ரித்திகா சிங்கையும் காப்பாற்றுகின்றனர். பின்னர் ராணாவுக்கு கோர்ட் தீர்ப்பு கொடுக்கிறது. மேலும், ரித்திகா சிங் மற்றும் பகத் பாசில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்துகின்றனர்.
ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியர் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இப்படி இருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? இப்படியெல்லாம் யோசிக்கும் போதே ரசிக்க தோன்றும் நிலையில் உண்மையில் படத்தில் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
வேட்டையனுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் உருவாகி வருகிறது. ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஷோபின் ஷகீர் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். சன்பிக்ஷர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். 2025 ஆம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.