சரியான நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்தும்... எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய வாலி! ஏன் தெரியுமா?

First Published | Oct 13, 2024, 11:35 AM IST

சரியான நேரத்தில் பாடல் எழுதிக் கொடுத்தும், திரைப்படம் வெளியாகாததற்கு 'வாலி' தான் காரணம் என எம்.ஜி.ஆர் அவரை கோபப்பட்டு திட்டிய சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

Lyricist Vaali

நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய லெஜெண்ட், கவிஞர் வாலி. இவர் திரைப்படங்களில் தன்னுடைய பாடல் வரிகளை நேர்த்தியாக கையாளுவதில் வல்லவர். அதேபோல் காதல், தத்துவம், சோகம், நட்பு, உறவு, என இவர் திரைப்படத்தில் தொடாத டாபிக்கே இல்லை. 15000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வாலி, புரட்சி நடிகர் எம்ஜிஆர்-க்கு மட்டும், சுமார் 60க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

MGR And Vaali Combo hit Songs

கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக எம்.ஜி.ஆர் மிகவும் ரசித்தது வாலியின் வரிகளை தான். இதற்க்கு உதாரணம், மாநாடு ஒன்றில் எம்ஜிஆர் வெளிப்படையாகவே இனி கண்ணதாசன் தன்னுடைய படங்களுக்கு பாடல் எழுதமாட்டார் என்றும், வாலி தான் தன்னுடைய படங்களுக்கு பாடல்களை எழுத போகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தகவல்,  தினத்தந்தி உட்பட அப்போது பிரபலமாக இருந்த நாளிதழ்களில் பிக் பிரேக்கிங்காக வெளியானதாம். இந்த தகவலை வாலியை தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'லால் சலாம்' படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை மூன்றே நாளில் அடித்து பறக்கவிட்ட 'வேட்டையன்'!

Latest Videos


Actor MGR Thalaivan Movie

எம்ஜிஆர் பாடல்களில், அரசியலையும் ஒன்றிணைத்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியது வாலியின் வரிகள் தான். அந்த அளவுக்கு வாலியின் கைவண்ணத்தில் வெளியான பாடல்கள் தனித்துவமானதாகவும், மக்களை எளிதில் சென்றடைய கூடிய வலிமை பெற்றதாகவும் இருந்தன.
 

MGR Scolding Vaali

எம்ஜிஆரை பொறுத்தவரை தன்னுடைய படங்களில் இடம்பெறும் பாடல்களின் வார்த்தைக்கு சக்தி அதிகம் இருப்பதாக நம்புபவர். எனவே எந்த விதத்திலும் நெகட்டிவான வார்த்தைகள் இடம்பெற கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பாராம். பலமுறை இதை வாலியிடம் கூறி, தமிழில் பல அறச்சொற்கள் உண்டு... "ஒரு சொல் வெல்லும், அதே நேரம் ஒரு சொல் கொள்ளும்" என்கிற பழமொழிக்கு ஏற்ப வார்த்தைகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள் என பலமுறை கூறி உள்ளாராம்.

பிக்பாஸ் வீட்டில் குறும்படம் போட மறுத்த விஜய் சேதுபதி; மகாலட்சுமி சொன்னதை நினைத்து கண்ணீர் வடித்த ரவீந்தர்!
 

MGR Trust Tamil Words

ஆனால் எம்ஜிஆர் சொன்னதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், அவர்  நடிப்பில் 1970 ஆம் ஆண்டு தாமஸ் மற்றும் சிங்கமுத்து இயக்கத்தில் வெளியான 'தலைவன்' திரைப்படத்தில் "நீராடி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில், தலைவன் வராமல் காத்திருந்தாள்". என்கிற அறச்சொல்லுடன் ஒரு பாடலை வாலி எழுத, "தலைவன் வராமல் காத்திருந்தால்"... என்கிற வார்த்தையால் தான் திரைப்படம் உரிய நேரத்தில் வெளியாகாமல் போனது என எண்ணி... வாலியை கோபித்து கடிந்து கொண்டாராம் எம்.ஜி.ஆர். இதை கேட்கும் போது ... இதெல்லாம் பெரிய விஷயமா? என தோன்றினாலும் தமிழ் வார்த்தைகளுக்கு உள்ள சக்தியை எந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் நம்பினார் என்பது தெரியும்.

click me!