பிக்பாஸ் வீட்டில் குறும்படம் போட மறுத்த விஜய் சேதுபதி; மகாலட்சுமி சொன்னதை நினைத்து கண்ணீர் வடித்த ரவீந்தர்!

First Published | Oct 13, 2024, 8:23 AM IST

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவுக்கு பின்னர், விஜய் சேதுபதி கமல் இடத்தை நிரப்பும் விதமாக மக்கள் முன்பும், போட்டியாளர்கள் முன்பும் தோன்றிய முதல் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பான நிலையில்... இதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

Vijay Sethupathi first Bigg Boss Show

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கப்பட்ட நிலையில், முதல் வாரமே சண்டைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றது. அதே போல் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் காலடி எடுத்து வைத்த சில மணிநேரத்திலேயே.... எந்த ரூமை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என கேட்டு, நீங்கள் தேர்வு செய்ய மறுத்தால் வெளியே தான் தூங்க வேண்டும் என பிக் பிக்பாஸ் கொடுத்த ட்விஸ்ட் வரை அனைத்தும் யாரும் எதிர்பாராத ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அதே போல் ஆண்கள் அணி - பெண்கள் அணி என பிக்பாஸ் பிரித்து வைத்து, விளையாட வைத்தும் ஹை லைட்டாக பார்க்கப்பட்டது.

bigg boss tamil season 8

பிக்பாஸ் வீட்டுக்குள் என்டர் ஆன ஒவ்வொரு போட்டியாளரும், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என முடிந்தவரை சண்டை மட்டுமே போட நினைத்த நிலையில், என்டர்டெயின் செய்ய தவறி விட்டனர். இந்நிலையில் நேற்று, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரம் என்பதால், போட்டியாளர்கள் முன்பு தோன்றிய விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் உள்ளே சென்றதில் இருந்து... இந்த ஒரு வாரம் முழுவதும் நடந்தது குறித்து நறுக்கான கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார். கமல்ஹாசனை போல் புரியாத கேள்விகளை தொகுத்து புதிர்போடாமல், இவர் பேசிய விதம் நேரடியாகவும், நேர்மையாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது.

ரஜினியால் 'படையப்பா' படம் ஃபிளாப் ஆகி இருக்கும்! காப்பாற்றியது கமல் தான்.. கே.எஸ்.ரவிக்குமார் கூறிய சீக்ரெட்!
 

Tap to resize

Ratan TATA

அதே போல் உள்ளே வந்ததுமே... மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு, மௌன அஞ்சலி செலுத்திய பின்னரே, பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க துவங்கினார். பின்னர் இந்த ஒரு வாரம் போட்டியாளர்களுக்கு எப்படி சென்றது என அவர்கள் கருத்தை தெரிந்து கொண்ட பின்னர், பிக்பாஸ் வீடு தேர்வு செய்யப்பட்டது முதல் ரியல் மற்றும் ஃபேக் கேம் வரை... ஒவ்வொன்றையும் விசாரிக்க துவங்கினார்.
 

Vijay sethupathi Play Short Film

அப்போது தான் ரவீந்தர் சந்திரசேகருக்காக ஒரு குறும்படமும் போடப்பட்டது. "ரவீந்தர் சந்திரசேகர், prank ஃபைட் குறித்து விவாதிக்கப்பட்டபோது, நாமினேஷனில் இருப்பவர்களை காப்பாற்ற தான் இந்த சண்டை  விட்டு தான், இதற்கான ஐடியாவையே ரஞ்சித்திடம் சொல்லி இருப்பார். ஆனால் மற்றவர்கள் இது பற்றி தங்களுக்கு தெரியாது என கூறினார். ரஞ்சித்தும் தன்னுடைய பெயரை கூறி கேம் ஆட வேண்டாம் என கோவமாக பேசினார். இதன் பின்னர் ரவீந்தர் ஒரு நிலையில்... தன்மீது தான் தவறு உள்ளதோ என்கிற சந்தேகத்தில், மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பல படங்களில் பிசியாக உள்ள தனுஷ்; அப்போ "இளையராஜா" Bio Pic கதி? காத்திருக்கும் மாதேஸ்வரன்!
 

Ravinder Chandrasekar Prank Fight

இதை தெடர்ந்து, விஜய் சேதுபதி... ரவீந்தர் பற்றி பேசும்போது ஆரம்பத்திலேயே நாமினேஷன் பற்றி கூறிவிட்டு தான் இந்த பிராங்க் சண்டை பற்றி பேசியதை கூறுகிறார். ஆனால் அந்த வீடியோவை உங்களுக்கு காட்ட முடியாது. மக்கள் அதை பார்த்திருப்பார்கள் என தெரிவித்தார்  அவர் பேசும் போது ஆண் போட்டியாளர்கள் அனைவரும் அருகில் தான் இருந்தனர். அவர் கூறிய பின்னரும்... தெரியாது என சப்பை கட்டு காட்டும் போட்டியாளர்களுக்கு,  இனி நான் பேசுவது வேஸ்ட்" என விஜய் சேதுபதி நறுக்கென பேசினார்.

அதே போல் இந்த பிராங்க் ஃபைட் குறித்து சிலர் தங்களின் கருத்தை கூறினர். அப்போது முந்திக்கொண்டு பேசிய விஜே ஆனந்தி...  "ரவீந்தர் - ரஞ்சித் இருவரும் சண்டை போடும் போது, அது ட்ராமாவாக இருக்க கூடும் என்கிற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. ரவீந்தர் உட்கார்ந்து தான் இருப்பார். அவருக்கு தண்ணி உட்பட, எதுவேண்டும் என்றாலும் மற்றவர்கள் தான் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என நிலைப்பார். அப்படிப்பட்ட மனுஷன் prank செய்யும் போது எழுந்து நின்று சண்டை போட்டார். அதை பார்த்த போது,  எங்களிடம் வேலை வாங்கி... பயன்படுத்தி கொண்டாரோ என தோன்றியது" என ஆனந்தி கூறினார்

Ravinder Chandrasekar Crying

இதை நினைத்து தான் தற்போது ரவீந்தர் கண்ணீர் விட்டுள்ளார். விஜய் சேதுபதி நிகழ்ச்சி முடிந்த பின்னர், தன்னுடைய மனைவி மகாலட்சுமி அப்போதே சொன்னார், பிக்பாஸ் வீட்டுக்குள் நீங்கள் சென்றால் இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று. நான் கால் வலிக்கிறது என்பதால் தான் கேட்டேன். உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை என இவர் கண்ணீருடன் பேசியது, பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருவ வைத்தது.

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் மக்கள் செல்வன் மகன் சூர்யா சேதுபதி - இதென்ன புது ட்விஸ்டா இருக்கு!

Latest Videos

click me!