Actor Rajinikanth Vettaiyan film
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10 ஆம் தேதி, ஆயுத பூஜையை முன்னிட்டு திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 'லால் சலாம்' படத்திற்கு பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்தை நடிகர் சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Vettaiyan Movie 3rd Day Collection
'வேட்டையன்' திரைப்படம் வெளியான அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால், வசூலிலும் தொடர்ந்து நல்ல கலெக்ஷனை பெற்று வருகிறது. ரஜினிகாந்தின் முந்தைய படமான 'லால் சலாம்' படத்தின் லைப் டைம் வசூலை மூன்றே நாட்களில் முடியடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம், இந்திய அளவில், மூன்றாவது நாளில் 26 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 'வேட்டையன்' திரைப்படம் மொத்தம் 81.70 கோடி வசூலை வாரி குவித்துள்ளது.
Vettaiyan Beat Lal Salaam Collection
உலக அளவில் 100 கோடி வசூலை, இரண்டே நாட்களில் எட்டிவிட்ட 'வேட்டையன்' திரைப்படம், இந்திய அளவில் லால் சலாம் படத்தை விட நான்கு மடங்கு அதிகம் வசூலித்துள்ளது. லால் சலாம் திரைப்படம், இந்தியாவில் மொத்தமாக 17 கோடியும், உலக அளவில் 80 முதல் 90 கோடி வரை மட்டுமே வசூலித்தது. ஆனால், 'வேட்டையன்' திரைப்படம், உலக அளவில் 3 நாட்களில் 150 கோடியை தாண்டிவிட்டது.
அதே போல், இந்திய அளவில் இதுவரை 81.70 வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 'வேட்டையன்' திரைப்படம் இந்திய அளவில் நூறு கோடி வசூலை அள்ளும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Vettaiyan 3rd Day Box Office Collection:
ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் ரஜினிகாந்த் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களை தவிர பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் பாடலாக உள்ளது.