பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆளு மட்டும் இல்ல... வசதியிலும் வெயிட் பார்ட்டியாக இருக்கும் ரவீந்தர் யார் தெரியுமா?

First Published | Oct 13, 2024, 3:52 PM IST

Bigg Boss Tamil Season 8 Contestant: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ரவீந்தர் சந்திரசேகரின் குடும்ப பின்னணி, மற்றும் சொத்து மதிப்பு குறித்த முழு தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

Ravinder is Producer cum You Tuber Reviewer

தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராகவும், youtube விமர்சகராகவும் அறியப்படுபவர் ரவீந்தர் சந்திரசேகர். 1984 ஆம் ஆண்டு, ஜூலை 8-ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர், லிப்ரா என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் 'சுட்ட கதை' என்கிற திரைப்படத்தை 2013 ஆம் ஆண்டு தயாரித்தவர்.  இதைத்தொடர்ந்து நலனும் நந்தினியும், கோலை நோக்கி பார்வை, முருங்கைக்காய் சிப்ஸ், போன்ற படங்களை தயாரித்தார்.

தயாரிப்பாளர் என்பதை தாண்டி, 'மார்கண்டேயனும் மகளிர் கல்லூரி' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இவர் திரையுலகிலும், சமூக வலைத்தளத்திலும் ரவீந்தர் சந்திரசேகர் என்று எப்படி அறியப்படுகிறாரோ அதே அளவுக்கு இவரின் ஃபேட் மேன் என்கிற பெயரும் மிகவும் பிரபலம். இதே பெயரில் ஃபேட்மேன் ஃபேக்ட்ஸ் என்கிற youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை சுமார் 130K  ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Ravinder Net worth

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக இருக்கும் ரவீந்தர், கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம், "நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தை துவங்க உள்ளதாக கூறி, அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபத்தை பெற்று தருவதாக பிரைன் வாஷ் செய்து ரூ.16 கோடி பணத்தை ஊழல் செய்ததாகவும், போலி ஆவணங்களை காட்டி நம்ப வைத்ததாக பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ரவீந்தர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது சுமத்தப்பட்ட புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் சந்திரசேகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்போது விளையாடி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட இவருக்கு ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 50,000 சம்பளம் கொடுக்க படுவதாக கூறப்படுகிறது. அதை போல் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் லிஸ்டில் ரவீந்த சந்திரசேகர் உள்ளார்.  

ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்துக்கு டஃப் கொடுக்க அக்டோபர் 18 ரிலீஸ் ஆகும் 5 படங்கள்!
 

Tap to resize

Ravinder Personal Life

ரவீந்தர் பர்சனல் வாழ்க்கை:

ரவீந்தர், 2012-ஆம் ஆண்டு, சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்.. சில வருடத்திலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவருக்கு சாந்தி மூலம் ஒரு மகன் உள்ளதாக கூறப்பட்டாலும், இதுகுறித்த உண்மையான தகவல் எதுவும் தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து வாணி ராணி, செல்லமே ,பிள்ளை நிலா, அன்பே வா, உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மகாலட்சுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும்.
 

Ravinder Chandrasekar and Mahalakshmi

ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் வெளியான போது... இருவரும் ஏதேனும் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கின்றார்களா? என்கிற சந்தேகம் தான் ரசிகர்களுக்கு மனதில் முதலில் உதித்தது. பின்னரே இது உண்மையான திருமண என்பதை இருவரும் உறுதி செய்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புதிதில், பல்வேறு  விமர்சனங்களுக்கு ஆளாகினர்.

சரியான நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்தும்... எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய வாலி! ஏன் தெரியுமா?

குறிப்பாக நடிகை மகாலட்சுமி சொத்துக்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை மகாலட்சுமி மறுத்தார். அதேபோல் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விடுவார்கள் என சிலர் கூறிய நிலையில்... அதனை தோற்கடித்து தற்போது வரை இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

Ravinder Chandrasekar

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப விழாவிற்கு கூட மகாலட்சுமி அவருடைய மகன் சச்சின் உடன் கலந்து கொண்டார். ரவீந்தர் சந்திரசேகர் பெற்றால் தான் பிள்ளையா? என விஜய் சேதுபதி முன்பு டயலாக் எல்லாம் பேசியது இவர் மீதான மரியாதையை கூடியது.

ரவீந்த சந்திரசேகர் மிகவும் குண்டாக இருப்பது இவருடைய தனி அடையாளமாக இருந்தாலும், இவருடைய மிகப்பெரிய மைனஸ் இது என கூறலாம். 39 வயதாகும் ரவீந்த சந்திரசேகர், ஆள் மட்டும் பார்க்க வெயிட்டானவர் அல்ல, அந்தஸ்திலும் மிகவும் வெயிட்டானவர் என்பது உங்களுக்கு தெரியுமா? 

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிலேயே இவர்தான் மிகவும் வசதி படைத்தவர் என கூறப்படுகிறது. மேலும் இவருடைய சொத்து மதிப்பு, 15 முதல் 20 கோடி இருக்கும் என கூறுகின்றனர்.  வசதியான குடும்பத்தில் பிறந்த ரவீந்திர சந்திரசேகர், பிக் பாஸ் வீட்டில் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக இருந்தும்... உடல் பருமனால் சிரமப்பட்டு வந்ததன் காரணமாகவே இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!