பின்னர் பரதேசி படத்தில் அதர்வாவை நடிக்க வைத்த பாலா, அவன் இவன் படத்துக்காக விஷாலை மாறு கண் உள்ளவராக நடிக்க வைத்தார். இப்படி பாலா இயக்கத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிடும். அந்த வகையில் அண்மையில் வணங்கான் படம் மூலம் நடிகர் அருண் விஜய்யை தன்னுடைய நடிப்பு பட்டறையில் பட்டை தீட்டி இருந்தார் பாலா. அப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்புக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால் படம் வணிக ரீதியாக பெரியளவில் வெற்றிபெறவில்லை.