பிரம்மாண்டத்தை வைத்து இனி பூச்சாண்டி காட்ட முடியாது! தமிழ் சினிமாவின் ஷாக்கிங் ரிப்போர்ட்

First Published | Jan 24, 2025, 12:58 PM IST

தமிழ்நாட்டில் பெரிய பட்ஜெட் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. அதைப்பற்றிய ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட் ஒன்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kanguva, Pushpa 2, Game Changer

காலம் மாற மாற ரசிகர்களின் ரசனையும் மாறிவிடும். அப்படி தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பிரம்மாண்டமாக படம் எடுத்தால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்கிற மனநிலையில் இருக்கும் இயக்குனர்களுக்கு ரசிகர்கள் கடந்த ஆண்டு முதல் நன்கு பாடம் புகட்டி வருகிறார்கள் உதாரணத்திற்கு தமிழ் சினிமா கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த இழப்பு பெரிய பட்ஜெட் படங்களால் தான் வந்தது.

Game Changer, Indian 2

பிரம்மாண்ட படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். அவரின் படங்களில் தனித்து தெரிவது பிரம்மாண்டம் மட்டும் தான். ஆனால் அதுவே தற்போது அவருக்கு எமனாக மாறி இருக்கிறது. கடந்த ஆறு மாத காலகட்டத்திற்குள் ஷங்கர் இயக்கத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்கள் வந்திருக்கிறது. அதில் ஒன்று இந்தியன் 2 மற்றொன்று கேம் சேஞ்சர். இதில் இந்தியன் 2 திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. அதேபோல் கேம் சேஞ்சர் திரைப்படம் 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஆத்தாடி விஷாலின் மதகஜராஜா படத்தை பந்தாட இந்த வாரம் ரிலீஸ் ஆகும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள்!


Flop Movies in Tamil Cinema

இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்விப் படங்களாக மாறி உள்ளன. இதில் இந்தியன் 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே ரூ.150 கோடி மட்டுமே வசூலித்தது. இப்படத்தால் 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் கேம் சேஞ்சர் திரைப்படம் கிட்டத்தட்ட பெரும்பாலான இடங்களில் தூக்கப்பட்டுவிட்டது. அப்படம் இன்னும் 200 கோடி கூட வசூலிக்கவில்லை. இதனால் இப்படமும் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Game Changer, Pushpa 2

இப்படி பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களும் சுமார் 300 கோடி அளவு நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன. பிரம்மாண்ட படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை புஷ்பா 2 படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படம் உலகளவில் 1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தாலும் தமிழ்நாட்டில் 40 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Pushpa 2, Kanguva

அதேபோல் கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய டிசாஸ்டராக மாறியது. இப்படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தனர். ஆனால் இப்படம் ரூ.150 கோடி கூட வசூலிக்கவில்லை. இப்படமும் பிரம்மாண்ட படம் என பில்டப் கொடுத்து புரமோட் செய்யப்பட்டது. பிரம்மாண்டம் இருந்தாலும் அதில் கதை சரிவர இல்லை என்றால் எப்பேற்பட்ட கொம்பனாலும் அப்படத்தை காப்பாற்ற முடியாது. இப்படி பிரம்மாண்டம்... பிரம்மாண்டம் என ஒரே படத்தில் 350 கோடி, 400 கோடியை கொட்டுவதற்கு பதிலாக லப்பர் பந்து போன்று 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு முதலீடு செய்தால் தமிழ் சினிமாவிற்கு அதிக வெற்றி கிடைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. 

இதையும் படியுங்கள்...  இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட கேம் சேஞ்சர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Latest Videos

click me!