ஆத்தாடி விஷாலின் மதகஜராஜா படத்தை பந்தாட இந்த வாரம் ரிலீஸ் ஆகும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள்!

First Published | Jan 24, 2025, 11:52 AM IST

ஜனவரி 24ந் தேதி தமிழில் ஒன்றல்ல.. இரண்டல்ல மொத்தம் ஆறு புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

madhagajaraja

பொங்கல் ரிலீசாக வெளியாகி, வசூலை குவித்து வரும் 'மதகஜராஜா' படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்கும் விதமாக இந்த வாரம் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

அதன்படி இந்த ஆண்டு, பொங்கலுக்கு வெளியாக இருந்த நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் அதிரடியாக பொங்கல் ரேஸில் இருந்து விலகிய நிலையில், பல படங்கள் வரிசை கட்டி வெளியானது. குறிப்பாக விஷாலின் 'மதகஜராஜா' படத்தில் துவங்கி, கேம் சேஞ்சர், வணங்கான், நேசிப்பாயா, தருணம், காதலிக்க நேரமில்லை, போன்ற பல படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காதலிக்க நேரமில்லை திரைப்படம் தோல்வியை தழுவியது.

Pongal Release

மதகஜராஜா பொங்கல் வின்னராக மாறிய நிலையில், வணங்கான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் பெரிதாக சொல்லும் படி எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் இந்த வாரம் அரை டஜனுக்கு அதிகமான படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன. அந்த படங்கள் பற்றின தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மனைவி மீது கை வைத்த இளைஞர்கள்: மாஃபியா டான் லீடர் செஞ்ச தரமான சம்பவம்: பணி படம் எப்படி?


Kudumbasthan

குடும்பஸ்தன்:

இளம் நடிகரான மணிகண்டன், தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளத்தை தேர்வு செய்து நடிப்பதை தவிர்த்து இந்த கால இளசுகளுக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஒரு சாதாரண குடும்பஸ்தன் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொல்லி உள்ள திரைப்படம் தான் குடும்பஸ்தன். இந்த படத்தை ராஜேஸ்வரி காளி சாமி இயக்கி உள்ளார். இப்படம் ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

KMK First Look

குழந்தைகள் முன்னேற்ற கழகம்:

நடிகர் யோகி பாபு மற்றும் செந்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் குழந்தைகள் முன்னேற்ற கழகம். அரசியல் நையாண்டி காமெடியாக உருவாக்கிய இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் தயாள் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.

இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட கேம் சேஞ்சர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
 

Bottle Radha

பாட்டில் ராதா:

இயக்குனர் பா ரஞ்சித் தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். தற்போது தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ள பாட்டில் ராதா படத்தை, அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கி உள்ளார். பாட்டில் ராதா படத்தை ஜோக்கர் படத்தில் நடித்த குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த வாரம் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

MR House Keeping

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்:

பிக் பாஸ் லாஸ்லியா நடிப்பில், விரைவில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் தான் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக youtube மூலம் பிரபலமான ஹரிபாஸ்கர் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள், அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில்... இந்த திரைப்படம் இவருக்கு வரவேற்பை பெற்றுத் தருமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓய்வு பற்றி பேசி ஷாக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா? சாவா டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி!

Vallan

வல்லான்:

சுந்தர் சி ஆக்ஷன் கதைகளத்தில் ஹீரோவாக நடித்து அதிர வைத்துள்ள திரைப்படம் தான் வல்லான். இந்த படத்தை மணி சேயோன் என்பவர் இயக்கி உள்ளார். விறுவிறுப்பான கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இந்த வாரம் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Poorveegam

பூர்வீகம்:

மக்கள் நவநாகரீகத்திற்கு மாறி வந்தாலும், எப்போதுமே கிராமத்து கதைகளுக்கு ஒரு தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இயக்குனர் ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பூர்வீகம். இந்த படத்தில் போஸ் வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இளவரசு, சங்கிலி முருகன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விஜய் மோகன் என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் இந்த வாரம் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பார்க்க தான் டம்மி; ஆனா முத்துக்குமரன் வென்ற பிக் பாஸ் டிராபியில் இத்தனை சிறப்பம்சங்களா?

Hong Kong Warriors:

டப்பிங் படங்கள்:

மேலும் இந்த வாரம் ஹாங்காங் வாரியர்ஸ் மற்றும் ராமாயண தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ் ராமா என்கிற இரண்டு டப்பிங் படங்களும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!