சூப்பரா? சுமாரா? பா.இரஞ்சித்தின் பாட்டல் ராதா எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

First Published | Jan 24, 2025, 1:56 PM IST

பா.இரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கிய பாட்டல் ராதா திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bottle Radha

நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் பலூன் பிக்சர்ஸ் சார்பில் டி.என். அருண்பாலாஜி இணைந்து தயாரித்துள்ள படம் பாட்டல் ராதா. இப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜான் விஜய், லொள்ளு சபா மாறன், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, பாரி இளவழகன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரூபேஷ் ஷாஜி பணியாற்றி இருக்கிறார். 

Bottle Radha Movie Review

படத்தொகுப்பாளராக இ. சங்க தமிழன் மற்றும் இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கிய பாட்டில் ராதா திரைப்படம் முதன் முதலில் நவம்பர் 4, 2023 அன்று தர்மசாலா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் எக்ஸ் தள விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... ப்ளூ சட்டையே இப்படி சொல்லிட்டாரே; குடும்பஸ்தன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ


Bottle Radha X Review

போதைக்கு அடிமையான ஒருவர் மது மீதும் குடும்பத்தின் மீதும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் பாட்டல் ராதா. சில யதார்த்தமான காட்சிகளுடன் கூடிய இப்படம் இறுதியில் சொல்ல வந்த கருத்தை திறம்பட சொல்லி இருக்கிறது. படம் முழுக்க குடிகாரனாக வந்தாலும் படத்தின் இறுதியில் நம்மை கவர்ந்துவிடுகிறார் குரு சோமசுந்தரம். சஞ்சனா இதுவரை நடித்ததிலேயே சிறந்த படம் இதுதான். ஜான் விஜய்யை பார்வையாளர்களை எரிச்சலூட்டாத ஒரு பாத்திரத்தில் பார்க்க முடிகிறது. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ், விழிப்புணர்வை மட்டுமல்லாது அன்பை விதைக்கும் படமாகவும் பாட்டல் ராதா உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Bottle Radha Social Media Review

குடிக்கு அடிமையானவரை பற்றிய ஒரு யதார்த்தமான படம் தான் பாட்டல் ராதா. குரு சோமசுந்தரத்தின் நடிப்பு அருமை. முதல் பாதியில் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இரண்டாம் பாதி எமோஷனலாக உள்ளது. கிளைமாக்ஸ் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. நல்ல படம் மிஸ் பண்ணீடாதீங்க என குறிப்பிட்டுள்ளார்.

Bottle Radha Twitter Review

பாட்டல் ராதா ஒரு குடிகாரனின் பயணத்தை சொல்லும் பவர்புல்லான படம். இயக்குனர் தினகரனின் ரைட்டிங், அதுவும் குறிப்பாக இரண்டாம் பாதியில் வேறலெவல். சமூக குடிகாரர்களுக்கும், குடியை விட போராடுபவர்களுக்கும் இப்படம் நிச்சயம் கனெக்ட் ஆகும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...  பிரம்மாண்டத்தை வைத்து இனி பூச்சாண்டி காட்ட முடியாது! தமிழ் சினிமாவின் ஷாக்கிங் ரிப்போர்ட்

Latest Videos

click me!