உன் டியூன் சரி இல்லை... அசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்ட இளையராஜாவின் முதல் வாய்ப்பு குறித்து பகிர்ந்த வாலி!

First Published | Aug 19, 2024, 9:14 PM IST

தன்னுடைய ஈடு இணையற்ற இசையால் உலக மக்களின் மனதை கொள்ளை கொண்ட இசைஞானி இளையராஜாவின், முதல் வாய்ப்பு குறித்தும் அவருடைய டியூன் சரியில்லை என அசிங்கப்படுத்தப்பட்டது குறித்தும் வாலி தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

Music Director Ilayaraja

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழி படங்களுக்கும்... ஆங்கிலம், ஹிந்தி, போன்ற மொழி கடந்த படங்களுக்கும் இசையமைத்து, இசைஞானியாகவும்... மேஸ்ட்ரோவாகவும்  ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இளையராஜா. 1000-திற்கும் மேற்பட்ட படங்களுக்கு சுமார் 7000 க்கும் மேற்பட்ட பாடல்களை கம்போஸ் செய்துள்ள இளையராஜா,  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியூசிக் கான்செர்ட்களை உலகம் முழுவதும் நடத்தி பிரபலமானவர்.
 

Ilayaraja First movie is Annakili

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம், 1978 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய இளையராஜா, இப்படத்திற்கு முன்னரே ஒரு படத்தில் இசையமைக்க இருந்தார் அந்த படம் குறித்த தகவலை தான் கவிஞர் வாலி பகிர்ந்து கொண்டுள்ளார்.

தளபதி விஜய்யின் கட்சி கொடி வெளியானது!
 

Latest Videos


Ilayaraja Missed Chance

இளையராஜா தன்னுடைய மூத்த சகோதரர் பாவலர் பெயரில் இசைக்குழு ஒன்றை துவங்கி, சகோதரர்களுடன் இணைந்து பாட்டு கச்சேரிகளை சிறிய அளவில் நடத்தி கொண்டிருந்தார். அப்போது  1971 ஆம் ஆண்டு, முத்துராமன் - சரோஜாதேவி நடித்த உயிர் படத்திற்கு , இந்த படத்தின் இயக்குனர் டி ஆர் சோமு தன் படத்திற்கு இசையமைக்க வேண்டும் எனக் கூறி, இளையராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதற்கான டியூன்களை தயார் செய்து செய்து இயக்குனரிடம் இளையராஜா கொடுத்து விட்டு, திரைப்படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மனதுக்குள் துள்ளாட்டம் போட்ட ராஜா, கருமாரியம்மன் கோவிலுக்கு சென்று தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற பூஜைகள் எல்லாம் செய்து வந்துள்ளார்.
 

Music Director Ilayaraja

பின்னர் இளையராஜா கொடுத்த டியூன் தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறி தயாரிப்பாளர் நிராகரித்து விட்டதாக... இளையராஜாவை அசிங்கப்படுத்தியுள்ளார் இயக்குனர். மேலும் இளையராஜாவுக்கு பதிலாக ரமணா ஸ்ரீதர் என்பவர் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் பட வாய்ப்பு இப்படி பெரு வலியை இளையராஜாவுக்கு கொடுத்த நிலையில், இதனை நினைத்து மனதால் மிகவும் வேதனைக்கு ஆளானார்.

'தங்கமகள்' சீரியலை தொடர்ந்து... யுவன் மயில்சாமி என்ட்ரி கொடுக்கும் சூப்பர் ஹிட் சீரியல்!
 

Ilayaraja's 16 Vayathinile got Tamilnadu State award

இதைத்தொடர்ந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு பின், 'அன்னக்கிளி' படத்தில் இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. முதல் படத்திலேயே தமிழ் திரையுலக ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்த இளையராஜா, இதைத்தொடர்ந்து தீபம், ஆளுக்கு ஒரு ஆசை, அவர் எனக்கே சொந்தம், பத்ரகாளி, கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, பதினாறு வயதினிலே, போன்ற பல படங்களுக்கு இசையமைத்தார். 16 வயதினிலே திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு ஸ்டேட் விருதும் இவருக்கு கிடைத்தது.
 

Ilayaraja Dedication

தன்னுடைய 81 வயதிலும் இடைவிடாமல் தன்னுடைய இசையால் ரசிகர்களை பிரமிக்க வைத்து வரும் இசைஞானி இளையராஜா, முதல் வாய்ப்பை இழந்திருந்தாலும் இன்று பல விருதுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். குறிப்பாக கலைமாமணி, மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது, கேரளா அரசின் விருது, பத்மபூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளும்..  ஐந்து முறை தேசிய விருதையும் வென்றுள்ளார்.

25 முறை ரிஜெக்ஷன்ஸ்; வலிகள் நிறைந்த ராஷ்மிகாவின் திரையுலக பின்னணி!
 

Ilayaraja Symphony

சிம்பொனி ஒன்றையும் தற்போது உருவாக்கியுள்ள இளையராஜா, விரைவில் அதை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய சுபாவத்தாலும் செய்கையாலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு இளையராஜா ஆளானாலும், இசை ரசிகர்கள் மனதை கட்டி ஆளும் ஒரே ராஜா... இளையராஜா தான்.

click me!