ஆசை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க தேடி பிடிக்கப்பட்ட புதுமுகம் தான் சுவலட்சுமி!

First Published | Aug 19, 2024, 9:07 PM IST

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ஆசை. இந்த படத்தில் நடித்த நாயகி சுவலட்சுமியின் சினிமா பயணம் எப்படி தொடங்கியது? யார் மூலம் இயக்குனர் வசந்த்தை சந்தித்தார் என்பதை பற்றி பார்ப்போம்.

Suvaluxmi - Aasai Movie

தனது திறமையின் மூலமாக தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் ஹீரோ யார் என்றால் அது அஜித் குமார் தான். அமராவதி படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு அரவிந்த் சாமியுடன் இணைந்து பாசமலர்கள் படத்தில் நடித்தார். இளமை பருவத்தில் அவரது நடிப்புத் திறமைக்கு சிறந்த உதாரணமாக அமைந்த படம் பவித்ரா.

Suvaluxmi Tamil Movies

இதில் கேன்சர் நோயாளியாக நடித்து கடைசியில் இறந்துவிடும் ஒரு கதாபாத்திரம். படத்திற்கும், பாத்திரத்திற்கும் ஏற்ப தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு சினிமா வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது. விஜய் உடன் இணைந்து ராஜாவின் பார்வையிலேயே படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அஜித் இறந்துவிடுவார்.

Tap to resize

Suvaluxmi Tamil Movies

அதன் பிறகு தான் ஆசை படம் வந்தது. இயக்குநர் வசந்த் எழுதி இயக்கிய படம் ஆசை. மணி ரத்னம் தயாரித்த இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ஆசை படத்திற்கு அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை தேடிக் கொண்டிருந்தார் இயக்குநர். இந்தப் படத்திற்கு அவருக்கு வெகுளியான முகபாவணை கொண்ட ஹீரோயின். ஏனென்றால், கதாபாத்திரம் அந்த மாதிரி.

Suvaluxmi

இயக்குநர் வசந்த் ஹீரோயின் தேடுவதை அறிந்த நடிகர் யூகி சேது வெகுளியான தோற்றம் கொண்ட ஒரு பெண்ணை அவரிடம் காட்டுகிறார். அவரைக் கண்ட இயக்குநர் வசந்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சி. உடனே ஹீரோயின் ஓகே, ரெடி டேக் ஆக்‌ஷன் என்று கூறியிருக்கிறார். அப்படி கிடைத்தவர் தான் நடிகை சுவலட்சுமி.

Aasai Movie

இதுதான் சுவலட்சுமியின் முதல் தமிழ் படம். தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக பெங்காலி படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் தான் உத்தோரன். இந்தப் படத்தை இயக்குநர் சத்யஜித் ரே இயக்கிக் கொண்டிருந்த போது பாதியிலேயே அவர் காலமாக, மீதி பாதியை அவரது மகனான சந்தீப் ரே இயக்கினார்.

Aasai Movie

ஆசை படம் சிறந்த புதுமுக நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது பெற்றுக் கொடுத்தது. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆசை படத்தைத் தொடர்ந்து சுவலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நதி கரையினிலே என்ற படத்தில் நடித்திருந்தார்.

Suvaluxmi Tamil Films

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் வெள்ளித் திரையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது ஹோம்லியான லுக், கிளாமர் இல்லாத தோற்றத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார். பேராசிரியர் ஸ்வாகடோ பானர்ஜியை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

Latest Videos

click me!