"கேப்டனின் ஆசி எப்போதும் உண்டு" - கொடி ஏற்றிய கையோடு DMDK தலைவர் பிரேமலதாவை சந்தித்த தளபதி!

Ansgar R |  
Published : Aug 19, 2024, 08:40 PM ISTUpdated : Aug 19, 2024, 08:42 PM IST

Thalapathy Vijay : தளபதி விஜய் இன்று பனையூரில் உள்ள தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சி அலுவலகத்தில், கட்சியின் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார்.

PREV
14
"கேப்டனின் ஆசி எப்போதும் உண்டு" - கொடி ஏற்றிய கையோடு DMDK தலைவர் பிரேமலதாவை சந்தித்த தளபதி!
Director Venkat Prabhu

விரைவில் தனது "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்பட பணிகளை முடிக்க உள்ள தளபதி விஜய், அடுத்தபடியாக தனது 69வது திரைப்பட பணிகளை துவங்க உள்ளார். இதற்கிடையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அவர் அறிமுகம் செய்ய உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தளபதி அவரை சந்தித்தது இதற்குத்தானா? பனையூரில் ரெடியாகும் TVKன் "கொடி அறிமுக விழா" - இரு முக்கிய அப்டேட்!

24
GOAT Trailer

இன்று சென்னை பனையூரில் உள்ள தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைமை அலுவலகத்தில், தனது கட்சியின் கொடியை ஏற்றி அவர் ஒத்திகை பார்த்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனது கட்சி பாடல் ஒன்றையும் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி அவர் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

34
Venkat Prabhu

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருடன் இணைந்து, மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிகவின் தற்போதைய தலைவருமான பிரேமலதாவை நேரில் சந்தித்து தனது GOAT திரைப்படத்திற்காகவும், அரசியல் பயணத்திற்கான வாழ்த்துக்களையும் பெற்று திரும்பியுள்ளார் தளபதி விஜய். அந்த புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது பகிர்ந்துள்ளார்.

44
The Greatest of All Time

வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேதி உலக அளவில் தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை தொடர்ச்சியாக முறியடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல இப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் வழியாக மறைந்த கேப்டன் விஜயகாந்தும் இணைந்துள்ளார்.

தளபதி விஜய்யின் கட்சி கொடி வெளியானது!

Read more Photos on
click me!

Recommended Stories