என்னது ஒரு பாட்டு பாட 12 மணி நேரமா? SPBஐ பாடாய் படுத்திய T ராஜேந்தர் - எந்த பாட்டுக்கு தெரியுமா?

First Published | Aug 19, 2024, 4:40 PM IST

S.P Balasubrahmanyam : மொத்தம் 16 மொழிகளில் 40,000திற்கும் அதிகமான பாடல்களை பாடி அசத்திய மாமேதை தான் மறைந்த பாடகர் SPB.

Singer SP Balasubrahmanyam

தான் யாருடைய இசையில் பாடினாலும் சரி, அந்த இசையமைப்பாளருக்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர். சாதாரண வரிகளை கூட தனது அசாத்திய குரலால், சூப்பர் வரிகளாக மாற்றும் திறன் இவரிடம் உண்டு. இசைஞானியை, வாடா போடா என்று அழைக்கக்கூடிய நெருங்கிய பழக்கம்கொண்ட ஒரே மனிதம் இவர் தான். ஆனால் இப்பேர்ப்பட்ட ஒரு பாடகரையே ஒரு அரை நாள் திக்குமுக்காட வைத்துள்ளார் ஒரு இயக்குனர். 

ஒவ்வொரு வில்லுக்கும் ஒரு துப்பாக்கி, ஒவ்வொரு பீஸ்டுக்கும் ஒரு GOAT – விஜய் ஹிட் மூவிஸ்!

SP Balasubrahmanyam

தனது வாழ்நாளில் மொத்தம் 16 மொழிகளில், சுமார் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி அசத்திய பாடகர் தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இதற்காக அவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஒரு பாடகரின் ஒன்று அல்லது இரண்டு பாடல்களை நாம் தொடர்ந்து கேட்டாலும் சலிக்காது. ஆனால் SPB எனும் மகா கலைஞனின் அனைத்து பாடல்களையும் Rewind மொடில் கேட்டால் கூட ஒரு நிமிடம் கூட நமக்கு சலிப்புத்தட்டது, அப்படியான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் தான் SPB.

Latest Videos


T Rajendar

அவர் தான் அசத்தல் இயக்குனர், ரைமிங் மன்னன் T ராஜேந்தர். இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என்று தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையோடு வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவர் தான் டி ராஜேந்தர். "ஒரு தலை ராகம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தனது தனித்துவமான கதை அம்சத்தால் மிக மிக சிறிய பட்ஜெட்டில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த பெருமை டி ராஜேந்தரையே சேரும். அந்த வகையில் ஒரு பாடலுக்காக சுமார் 12 மணி நேரம் எஸ்பி பாலசுப்பிரமணியத்தை பாடாய்படுத்தியதும் டி ராஜேந்தர் தான்.

Mythili Ennai Kadhali

கடந்த 1986ம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "மைதிலி என்னை காதலி". இந்த திரைப்படத்தின் இயக்குனராக மட்டுமல்ல தயாரிப்பாளராக, ஒளிப்பதிவாளராக மற்றும் இசையமைப்பாளராக பணியாற்றியதும் ராஜேந்தர் தான். அந்த படத்தில் வரும் 11 பாடல்களில் 8 பாடல்களை பாடியது SPB தான். ஆனால் "நானும் உந்த உறவை நாடி வந்த பறவை" என்ற பாடலை பாடியபோது தான் அந்த சம்பவமே நடந்துள்ளது. 

பொதுவாக ஒரு கால்ஷீட்டுக்கு 7 பாடல்களை விளாசித்தள்ளும் SPB, அன்று சுமார் 12 மணிநேரம் அந்த ஒரே பாடலை தான் பாடியுள்ளார். இயக்குனர் T ராஜேந்தர் பாசமாக பேசி பேசி, கிட்டத்தட்ட 12 மணிநேரம் தனக்கு பிடித்தது போல அந்த ஒரு பாடல் வரும் வரை காத்திருந்து அந்த பாடலை எடுத்துள்ளார்.

கங்குவா vs வேட்டையன் : 1000 கோடி வசூலுக்கு வாய்ப்பே இல்ல! போட்டி பொறாமையால் பெருமையை இழக்கிறதா தமிழ் சினிமா?

click me!