ஒவ்வொரு வில்லுக்கும் ஒரு துப்பாக்கி, ஒவ்வொரு பீஸ்டுக்கும் ஒரு GOAT – விஜய் ஹிட் மூவிஸ்!

Published : Aug 19, 2024, 04:31 PM ISTUpdated : Aug 19, 2024, 04:41 PM IST

தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள 'GOAT' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய்யின் இளமைக்கால தோற்றம் குறித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

PREV
16
ஒவ்வொரு வில்லுக்கும் ஒரு துப்பாக்கி, ஒவ்வொரு பீஸ்டுக்கும் ஒரு GOAT – விஜய் ஹிட் மூவிஸ்!
Thalapathy Vijay - The Greatest of All Time

தளபதி விஜய் அப்பா மகன் கதாபத்திரத்தில் நடித்துள்ள படம் GOAT - The Greatest of All Time. முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் விஜய் காம்பினேஷனில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி GOAT படத்தில் விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன், வைபவ், யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் அமீர், ஜெயராம், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

26
Thalapathy Vijay

GOAT படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு GOAT படத்தின் டிரைலர் வெளியாகி உலகம் உழுவதும் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடம் பிடித்தது. யூடியூப்பில் 4 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

36
GOAT Trailer

GOAT படத்திற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான Beast படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும் வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் விஜய் ரா ஏஜெண்டாக நடித்திருந்தார். தீவிரவாத தலைவனுக்காக மால் ஒன்றை ஹைஜாக் செய்த தீவிரவாதிகளிடமிருந்து மக்களை காப்பற்றுவதோடு, எப்படி தீவிரவாத தலைவனை அவர்களது நாட்டிற்கு சென்று கைது செய்து கூட்டி வருகிறார் என்பது போன்ற கதையை மையப்படுத்தி பீஸ்ட் படம் வெளியாகியிருந்தது.

46
Thalapathy Vijay GOAT

பீஸ்ட் படம் மட்டுமின்றி பாடல்களும் ரசிகர்களிடையே டிரெண்டானது. மேலும் ஹலமதி அபி போ என்ற பாடலுக்கு ரீல்ஸூம் உருவாக்கி டிரெண்ட் செய்தனர். அதற்கு முன்னதாக விஜய், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் ஆகியோரது நடிப்பில் வில்லு படம் வெளியானது. இந்த படத்திலும் விஜய் அப்பா மற்றும் மகன் என்று 2 வேடங்களில் நடித்திருந்தார். ஆக்‌ஷன் காமெடி கதையை மையப்படுத்திய இந்த படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை.

56
goat movie

இராணுவம் தொடர்பான இந்த கதையைத் தான் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தை கொடுத்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தான் எப்படி வில்லுக்கு பிறகு துப்பாக்கி மாஸ் ஹிட் கொடுத்ததோ அதே போன்று பீஸ்ட்டுக்கு பிறகு அதே மாதிரியான ஒரு கதையைக் கொண்டு உருவாக்கப்பட்ட GOAT படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

66
GOAT Movie

ஏற்கனவே இந்தப் படத்தில் ஸ்பார்க், சின்ன சின்ன கண்கள் மற்றும் விசில் போடு ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கோட் படம் ரூ.500 கோட் வரையில் வசூல் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories