25 முறை ரிஜெக்ஷன்ஸ்; வலிகள் நிறைந்த ராஷ்மிகாவின் திரையுலக பின்னணி!

Published : Aug 19, 2024, 03:36 PM ISTUpdated : Aug 19, 2024, 04:43 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... திரைப்பட வாய்ப்பு என்பது தனக்கு எளிதில் கிடைத்துவிட வில்லை, இதற்கான பல ரிஜெக்ஷனை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

PREV
17
25 முறை ரிஜெக்ஷன்ஸ்;  வலிகள் நிறைந்த ராஷ்மிகாவின் திரையுலக பின்னணி!
Rashmika Mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா, திரையுலகில் வாய்ப்பு தேடிய போது தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், நிராகரிப்புகள் குறித்தும் சமீபத்தில் கொடுத்தார் பேட்டி ஒன்றில் உணர்வு பூர்வமாக பேசியுள்ளார்.

27
Rashmika Mandanna Debut Movie

கர்நாடகாவை மாநிலம், குடகு பகுதியில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 28 வயதாகும் நடிகை ராஷ்மிகா மந்தனா, மிகவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதிலேயே ஒரு நடிகையாக வேண்டும் என்கிற ஆசை மனதிற்குள் வந்து விட்டதால், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, பல  படங்களின் ஆடிஷனில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

தங்கையுடன் அஜித் மனைவி ஷாலினி கொண்டாடிய வரலட்சுமி நோம்பு! வைரலாகும் புகைப்படங்கள்!
 

37
Rashmika Mandanna First movie is kirik Party

ஆனால் இவருக்கு 2016 ஆம் ஆண்டு தான் 'கிரிக் பார்ட்டி' என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் இருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும்,அதனை நிராகரித்த ரஷ்மிகா தன்னுடைய திறமைக்கு ஏற்ற வாய்ப்பு அமைந்தால் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

47
Rashmika Mandanna meet 25 rejections

இவர் ஆடிஷனில் கலந்து கொண்டபோதெல்லாம், இதெல்லாம் ஹீரோயின் மூஞ்சி கிடையாது என கூறி பலர் நிராகரித்துள்ளதாகவும். ஒருமுறை இரண்டு முறை அல்ல... சுமார் 25 முறை தன்னை பல ஆடிஷன்களில் இருந்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், வெளியேற்றி உள்ளதாகவும். ஒவ்வொரு முறையும் நான் அழுது கொண்டு தான் வீட்டு வருவேன். ஆனால் மறுநாள் சோகமாகி ஒரே இடத்தில் அமர்ந்து விடாமல், அடுத்தடுத்த வாய்ப்பை தேட துவங்கிவிடுவேன் என கூறியுள்ளார்.

அக்கா ஜான்வியை தொடர்ந்து... முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட குஷி கபூர்!
 

57
Rashmika Mandanna Bold Speech

தன்னுடைய விடாமுயற்சியால் மட்டுமே, இந்த இடத்தை அடைந்துள்ளதாக ராஷ்மிகா மந்தனா கூறியுள்ள நிலையில், எந்த ஒரு தோல்வி வந்தாலும் அதை கண்டு துவண்டு விடாமல், தொடர்ந்து முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பதற்கு தன்னுடைய கதை ஒரு உதாரணம் என்று... பலரை ஊற்றுவிக்கும் விதமாகவே இதனை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
 

67
Rashmika Mandanna Marriage stopped

'க்ரிக் பார்ட்டி' படத்தில் ரக்ஷத் செட்டிக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த போது, இவருக்கும் ஏற்பட்ட காதல் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், 2018 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.  ரக்ஷித் ஷெட்டியை இவர் பிரிந்து விட்டதால், தற்போது வரை கர்நாடகாவில் ரக்ஷித் ஷெட்டியின் ரசிகர்கள் இவரை தொடர்ந்து ட்ரோல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ராஷ்மிகா நடிக்கும் படங்களையும் நிராகரிப்பதால், கன்னட மொழி படங்களை தவிர்த்து, தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார்கள்.

சத்தமில்லாமல் நடந்த சீரியல் நடிகையின் விவாகரத்து! கமுக்கமாக நடந்த இரண்டாவது திருமணம் - வைரல் போட்டோஸ்!
 

77
National Crush

தற்போது ராஷ்மிகா, தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதை தவிர இரண்டு ஹிந்தி படங்களும் இவரின் கை வசம் உள்ளது. சல்மான் கானுக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ள சிக்கந்தர் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா கூறியதில் இருந்து நேஷ்னல் கிரஷாக இருந்தாலும், சில சவால்களை கடந்தால் மட்டுமே முன்னணி இடத்திற்கு வரமுடியும் 
 

Read more Photos on
click me!

Recommended Stories