தங்கையுடன் அஜித் மனைவி ஷாலினி கொண்டாடிய வரலட்சுமி நோம்பு! வைரலாகும் புகைப்படங்கள்!

First Published | Aug 19, 2024, 1:58 PM IST

அஜித் மனைவி ஷாலினி, முதல் முறையாக... தன்னுடைய வீட்டில் கொண்டாடிய வரலட்சுமி நோம்பின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்க்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
 

Varalakshmi Nombu Festival

சுமங்கலி பெண்கள் ஒவ்வொரு வருடமும், தங்களின் மாங்கல்ய பலம் கூடவும்... கன்னி பெண்கள் நல்ல கணவர் அமையவேண்டும் என வேண்டிக்கொண்டு, மகாலட்சுமிக்கு விரதம் மற்றும் நோம்பிருந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Shalini Celebrate Varalakshmi nombu with Shamlee

இந்த மங்களகரமான நிகழ்வை நடிகை சினேகா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பலர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பின்பற்றி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும், வசூல் மன்னனுமான அஜித்தின் மனைவி ஷாலினியும் கொண்டாடி வருகிறார்.

அக்கா ஜான்வியை தொடர்ந்து... முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட குஷி கபூர்!

Tap to resize

Shalini Follow Ajith Family Tradition:

ஷாலினி பிறப்பால் ஒரு கிருஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், அஜித்தை திருமணம் செய்து கொண்ட பின்னர், முழுக்க முழுக்க அஜித்தின் குடும்ப பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகிறார். அஜித்துக்காக தன்னுடைய நடிப்பையும் நிறுத்திக்கொண்டு... முழு குடும்ப தலைவியாக மாறினார்.
 

Shalini Varalakshmi Nombu Viratham Photos

இந்நிலையில் முதல் முறையாக, தன்னுடைய வீட்டில் நடந்த... வரலட்சுமி பூஜையின் புகைப்படங்களை ஷாலினி சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஷாலினியின் வரலட்சுமி பூஜை நிகழ்ச்சியில் அவரின் தங்கை ஷாமிலியும் கலந்து கொண்டுள்ளார்.

பிரபல சீரியல் நடிகருடன் விவாகரத்து; இரண்டாவது திருமணம் செய்த நடிகை சுபிக்ஷா!
 

Ajith Wife Shalini Recent Photos

ஷாலினிக்கு கடந்த மாதம், உடலில் ஏற்பட்ட சிறு பிரச்சனைக்காக மைனர் ஆபரேஷன் ஒன்று செய்யப்பட்ட நிலையில், அதில் இருந்து மீண்டும் உடல்நலம் தேறி தன்னுடைய வீட்டில் வரலக்ஷ்மி நோம்பிருந்துள்ளார் என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிகிறது. மேலும் ஷாலினியின் கடவுள் பக்தியை வெளிப்படுத்தும் முதல் புகைப்படமாகவும் இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!