ஒரு படத்திற்கு ரூ.280 கோடி! ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் இவர் தான்!

First Published | Aug 19, 2024, 1:34 PM IST

தென்னிந்திய சினிமா மிகப்பெரிய வளர்ச்சியடைந்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ரஜினிகாந்த் முதல் விஜய் வரை, யார் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

South actors

இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட் சினிமா தான் என்று கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. சினிமாவை பொறுத்த வரை நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டாலும், பாலிவுட் நடிகர்களே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாவும் இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. பல தென்னிந்திய படங்கள், பான் இந்தியா படங்களாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக்ப்ஸ்டர் படங்களாக வெற்றி பெறுகின்றன. இதனால் தென்னிந்திய நடிகர்களின் கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Rajinikanth

ரஜினிகாந்த்

45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருவாகி வரும் கூலி படத்திற்கு ரூ. 280 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். இதன் மூலம் அஹ்டிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராக அவர் மாறி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறி உள்ளார். 

Tap to resize

Thalapathy Vijay

விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய், சமீபத்தில் தான் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி ரிலீசாக உள்ளது. நடிகர் விஜய் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூரி? கொட்டுக்காளி முதல் வாழை வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட்

Prabhas

பிரபாஸ்

S.S ராஜமௌலியின் பிரம்மாண்டமான பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். அவர் ஒரு படத்திற்கு 150-200 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhaasan

கமல்ஹாசன்

இந்தியாவின் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் ஒரு திரைப்படத்திற்கு 100-150 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார். இந்தியன் 2 படத்திற்காக அவர் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தனது சம்பளத்தை பன்மடங்கு உயர்த்தியாக கூறப்படுகிறது.

Allu Arjun

அல்லு அர்ஜுன்

புஷ்பாவின் மகத்தான வெற்றி அல்லு அர்ஜுனை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றது. புஷ்பா படத்திற்கு பின் தனது சம்பளத்தை அல்லு அர்ஜுன் கணிசமாக உயர்த்தி உள்ளார். அவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜின் மனைவி யார்? இதனால் தான் தனது குடும்பத்தை பற்றி பேச மறுக்கிறாரா?

Ram Charan

ராம் சரண்

அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்களில் ஒருவரான ராம் சரண் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வருகிறார், ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் ராம் சரண் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்திற்கு ரூ. 100 கோடி சம்பளம் வாங்கிய அவர் தனது அடுத்த படத்திற்கு ரூ. 130 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளாராம். .

Latest Videos

click me!