ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூரி? கொட்டுக்காளி முதல் வாழை வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட்

Published : Aug 19, 2024, 01:00 PM IST

சூரி நடித்த கொட்டுக்காளி முதல் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
16
ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூரி? கொட்டுக்காளி முதல் வாழை வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட்
Vaazhai

வாழை

மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின்னர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தான் தயாரித்துள்ளார். இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல், கலையரசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். வாழை திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

26
Kottukkaali

கொட்டுக்காளி

விடுதலை, கருடன் என அடுத்தடுத்து சூரி ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் மாஸ் வெற்றியை ருசித்த நிலையில், அவரின் ஹீரோவாக நடித்த அடுத்த படமான கொட்டுக்காளி தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். வினோத்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். இப்படமும் வருகிற ஆகஸ்ட் 23ந் தேதி திரைகாண உள்ளது.

36
PogumIdam VeguThooramillai

போகுமிடம் வெகுதூரமில்லை

மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் போகுமிடம் வெகுதூரமில்லை. இப்படத்தை சிவா கிலாரி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து உள்ளார். இப்படமும் ஆகஸ்ட் 23-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... கங்குவா vs வேட்டையன் : 1000 கோடி வசூலுக்கு வாய்ப்பே இல்ல! போட்டி பொறாமையால் பெருமையை இழக்கிறதா தமிழ் சினிமா?

46
Atharma Kathaigal

அதர்மக் கதைகள்

ஜீவி படத்தின் நாயகன் வெற்றி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் அதர்மக் கதைகள். இப்படத்தை காமராஜ் வேல் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரெஹானா, அருணகிரி, ஹரிஷ் அர்ஜுன் மற்றும் சரண் குமார் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். இப்படமும் ஆகஸ்ட் 23-ல் திரைகாண உள்ளது.

56
Saala

சாலா

மணிபால் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் சாலா. இப்படம் ஒரு பாரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு தீசன் இசையமைத்து இருக்கிறார். ரவிந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படமும் ஆகஸ்ட் 23-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

66
OTT Release Movies

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடி வசூல் அள்ளிய கல்கி 2898AD திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்து கடந்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ராயன் திரைப்படமும் ஆகஸ்ட் 23-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... ஜான்வி கபூர் வாங்கிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

click me!

Recommended Stories