சத்தமில்லாமல் நடந்த சீரியல் நடிகையின் விவாகரத்து! கமுக்கமாக நடந்த இரண்டாவது திருமணம் - வைரல் போட்டோஸ்!

First Published | Aug 19, 2024, 12:29 PM IST

சீரியல் நடிகை சுபிக்ஷா ஏற்கனவே, நடன இயக்குனரும்... சீரியல் நடிகருமான மான்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டநிலையில், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது அவினாஷ் வாசுதேவன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 

Alya Manasa Ex Lover Manas:

நடிகை ஆல்யா மானசா, சீரியல் நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர், 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் தன்னுடன் இணைந்து நடனமாடிய மானஸ் என்பவரை தான் உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மானசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடன் விஜய் டிவியில் 'ராஜா ராணி' தொடரில் இணைந்து நடித்து வந்த சஞ்சீவை காதலிக்க தொடங்கினார்.

Alya and Sanjeev Wedding

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே ஆல்யா கர்ப்பமானார். இதை தொடர்ந்து இருவருக்கும் அவசர அவசரமாக திருமணம் நடந்தது. மேலும் ஆல்யாவின் காதலை அவருடைய பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், பெற்றோரை எதிர்த்து திருமண வாழ்க்கையில் இணைந்தார். முதலில் சஞ்சய் வீட்டிலும் ஒரு சில எதிர்ப்புகள் இருந்தாலும், பின்னர் சஞ்சீவி அம்மா இருவரையும் ஏற்றுக் கொண்டார்.

சூர்யாவுடன் மோதலை உறுதி செய்த ரஜினிகாந்த்; 'வேட்டையன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tap to resize

Alyama Manasa Serials

தற்போது அல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், இருவருமே தொடர்ந்து சீரியல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.  அண்மையில் தங்களின் கனவு வில்லா ஒன்றையும் 1.50 கோடி செலவில் கட்டி முடித்து குடியேறினர்.

Manas and Subiksha Wedding

ஆலியா மானஸாவை பிரிந்த மானஸ், சீரியல் நடிகையும், டான்சருமான சுபிக்ஷா என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மிகப் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் கலா மாஸ்டர் மற்றும் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

'ராயன்' OTT ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

Subiksha Divorce Ex husband

மானஸ் நீயா 2 படத்தில் வரலட்சுமி உடன் சேர்ந்து ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளது மட்டுமின்றி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், செவ்வந்தி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

Subiksha weds Avinash

அதை போல் சுபிக்ஷா, 'நீதானே என் பொன்வசந்தம்' என்கிற சீரியலில் அறிமுகமான நிலையில், பின்னர் சி வி குமார் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான 'கொற்றவை' என்கிற படத்தில் நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான 'ரஜினி' சீரியலிலும் நடித்திருந்தார். அடுத்தடுத்து சில சீரியல்களில் நடித்து வரும் சுபிக்ஷா... மானசை திருமணமான 2 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்ததாக கூறப்படுகிறது.

மணிரத்னம் படத்துக்கே நோ சொன்ன மைக் மோகன்.. அப்படி என்ன பிரச்சனை? எந்த படம் தெரியுமா?

Subiksha second marriage photos

தன்னுடைய சமூக வலைதளத்தில் இருந்து, மானசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கி இந்த தகவலை உறுதி செய்தார். இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த தொழிலதிபர், அவினாஷ் வாசுதேவன் என்பவரை சுபிக்ஷா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!