லோகேஷ் கனகராஜின் மனைவி யார்? இதனால் தான் தனது குடும்பத்தை பற்றி பேச மறுக்கிறாரா?

Published : Aug 19, 2024, 12:16 PM ISTUpdated : Aug 19, 2024, 12:33 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது மனைவி, குழந்தைகள் குறித்து பொதுவெளியில் பேச விரும்பாததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

PREV
19
லோகேஷ் கனகராஜின் மனைவி யார்? இதனால் தான் தனது குடும்பத்தை பற்றி பேச மறுக்கிறாரா?
Lokesh kanagaraj

இன்று தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். கோவை மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் எம்.பி.ஏ முடித்து விட்டு வங்கியில் பணியாற்றி வந்தார். ஆனால் சினிமா மீதான ஆர்வத்தால் குறும்படங்களை இயக்கி வந்தார். பின்னர் குறும்பட போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியின் நடுவராக இருந்த கார்த்திக் சுப்புராஜிற்கு லோகேஷின் குறும்படம் மிகவும் பிடித்து போகவே படங்களை இயக்க அவரை ஊக்கப்படுத்தி உள்ளார்.

 

29
Maanagaram Movie

2016-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த அவியல் என்ற ஆந்தாலஜி படத்தில் லோகேஷ் களம் என்ற பாகத்தை இயக்கி இருந்தார். 2017-ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மாபெரும் ஹிட் படமாக மாறவில்லை என்றாலும் டீசண்டான வரவேற்பை பெற்றது. 

 

39
Kaithi Movie

இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். கைதி படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கமலின் செல்லப்பிள்ளை... கோலிவுட் ஹிட்மேன் லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

49

அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். மாஸ்டர் படமும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முன்னணி இயக்குனராக மாறினார். 

59
vikram

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ்க்கு கமலை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய ஹிட்டானது. 2022-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் மாறியது. இதன் மூலம் எல்.சி.யு என்ற கான்செப்ட்பையும் அவர் உருவாக்கினார். 

 

69
Leo

இதை தொடர்ந்து மீண்டும் விஜய் உடன் கைகோர்த்த லோகேஷ் லியோ படத்தை இயக்கினார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

கங்குவா vs வேட்டையன் : 1000 கோடி வசூலுக்கு வாய்ப்பே இல்ல! போட்டி பொறாமையால் பெருமையை இழக்கிறதா தமிழ் சினிமா?

79
Lokesh kanagaraj

இதனிடையே ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்ற ஆல்பம் மூலம் நடிகராக மாறினார். ரஜினியின் கூலி படத்தை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் என அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளார். 

எனினும் தனது குடும்பம் பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் எந்த தகவலையும் லோகேஷ் கனகராஜ் கூறியதில்லை. ஆரம்பத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளை அவர் தவிர்த்து வருகிறார். 
எனவே லோகேஷ் கனகராஜுக்கு திருமணம் ஆகிவிட்டதாக என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

89
Lokesh kanagaraj

இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. லோகேஷின் மனைவி பெயர் ஐஸ்வர்யா. இந்த தம்பதிக்கு ஆருத்ரா என்ற மகனும், ஆத்விகா என்ற மகளும் இருக்கின்றனர். எனினும் அவரின் மனைவி குழந்தைகளின் போட்டோ எதுவும் வெளியாகவில்லை.
 

99
Lokesh kanagaraj

தனது குடும்பம் பற்றி ஏன் பேசுவதில்லை என்பது குறித்தும் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். ஒருமுறை இதுகுறித்து பேசிய அவர் “ ஆரம்பத்தில் இருந்தே தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளை தவித்து வருகிறேன். அதை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. சினிமாவுக்கு வந்த பிறகு எனக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தால் போது. என் குடும்பத்தை பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை. பாராட்டு, விமர்சனம் என எதுவாக இருந்தாலும் அது நமக்குள் இருக்கும் தொடர்பே போதும்” என்று தெரிவித்தார். 

click me!

Recommended Stories