சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள, 'வேட்டையன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்து, கங்குவாவுடனான மோதலை உறுதி செய்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கேமியோ ரோலில் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'.
26
Lyca Produced Vettaiyan:
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் .மேலும் இப்படம் முழுக்க முழுக்க என்கவுண்டருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். குறிப்பாக பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் பல வருடங்களுக்கு பின்னர், தன்னுடைய நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து நடத்தியுள்ளார். மேலும் மஞ்சு வாரியர், பகத் பாஸில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, விஜய் டிவி ரக்சன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
46
Vettaiyan post production works going
'ஜெய்பீம்' படத்தை தொடர்ந்து டி ஜே ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தின் போஸ் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். கேஜிஎப் படத்திற்காக தேசிய விருதை பெற்ற ஸ்டண்ட் கலைஞர் அன்பறிவ் இப்படத்தின் ஸ்டெண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சற்று முன் லைகா நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி 'வேட்டையன்' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூர்யாவின் கங்குவாவோடு... வேட்டையன் மோதுவது உறுதியாகியுள்ளார்.
66
Vettaiyan vs Kanguva
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படமும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த இரு படங்களுமே 'பான்' இந்தியா படமாக வெளியாக உள்ளது. இரண்டு படங்களுமே பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால், ஆயுத பூஜையே தீபாவளி ரேஞ்சுக்கு செம்ம விஷுவல் ட்ரீட்டாக அமைய போவது உறுதி.