தமிழ் திரையுலகில் குடும்பப்பாங்கான படங்களை எடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த திரைப்படம் முத்து. கடந்த 1995-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். சரத்பாபு எஜமானாக நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
24
ks ravikumar
அதுமட்டுமின்றி முத்து திரைப்படம் ஏராளமான விருதுகளையும் வென்று குவித்தது. குறிப்பாக ரஜினிக்கு ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது இப்படத்தின் மூலம் தான். இப்படத்துக்கு ஜப்பானில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அங்கு அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்கிற சாதனையை 20 ஆண்டுகளுக்கு மேலாக தக்கவைத்து இருந்தது முத்து திரைப்படம். அண்மையில் தான் ஆர்.ஆர்.ஆர் படம் அந்த சாதனையை முறியடித்தது.
இந்த நிலையில், முத்து படத்திற்காக தான் வாங்கிய சம்பளம் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறி இருக்கிறார். முத்து படம் கமிட்டாகும் முன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என ரஜினி கேட்டாராம். அதற்கு அவர் 12 லட்சம் வாங்குவதாக கூறி இருக்கிறார். உடனே முத்து படத்துக்கு அவரின் சம்பளம் ரூ.15 லட்சம் என எழுதி அப்படத்தை தயாரித்த கே. பாலச்சந்தரிடம் கொடுத்திருக்கிறார் ரஜினி. அவர் அதைப் பார்த்துவிட்டு ஷாக் ஆகிப்போய்விட்டாராம்.
44
K Balachander
உனக்கு இவ்வளவு சம்பளமாடா என ஆச்சர்யத்துடன் கேட்டிருக்கிறார் கே.பி. ஏனெனில் அவர் ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கியதில்லையாம். அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் குறைக்க வேண்டுமென்றால் குறைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, கே.பி-யோ ரஜினியே எழுதிட்டான் அதை குறைக்க முடியாது என சொல்லி அந்த சம்பளத்தை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தான் இயக்கிய நாட்டாமை படத்துக்காக தனக்கு வெறும் 5 லட்சம் தான் சம்பளம் கொடுத்தார்கள் என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.