இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! ஜீன்ஸ் பட பாடலுக்காக ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடைகளின் அசர வைக்கும் பின்னணி

First Published | Aug 19, 2024, 8:37 AM IST

ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலுக்காக ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடைகளும், அதன் ஆச்சர்யங்கள் பற்றியும் பார்க்கலாம்.

Jeans Movie song Secret

ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ஜீன்ஸ். அப்படத்தில் இடம்பெற்ற பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலுக்காக உலகில் உள்ள ஏழு அதிசயங்களிலும் ஷூட்டிங்கை நடத்தி இருப்பார்கள். இன்று பார்த்தால் கூட பிரம்மிப்பை ஏற்படுத்தும் அப்பாடலில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு பின்னணியிலும் ஒரு மிகப்பெரிய கதை இருக்கிறதாம். அதைப்பற்றி பார்க்கலாம்.

Jeans Movie Aishwarya Rai

பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலில் நடிகை ஐஸ்வர்யா ராய் மொத்தமாக 13 ஆடைகள் அணிந்திருப்பார். அதில் அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் தவிர மற்ற 6 அதிசயங்களுக்கு முன் ஆடும்போது இரண்டு விதமான ஆடைகளை உடுத்தி இருப்பார். அதில் ஒன்று அந்தந்த நாட்டின் ராணிகளின் உடை மற்றொன்று டிரெண்டிங் ஆடையாம்.

Tap to resize

Jeans Movie Poovukul Olindhirukum song

சீன பெருஞ்சுவரில் டான்ஸ் ஆட ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடை, Zhao Feyan என்கிற ராணியின் உடையை பிரதிபலிக்கிறது. அதேபோல் ஈபிள் டவர் முன் ஐஸ்வர்யா ராய் அணிந்து ஆடிய ஆசை Marie Antoinette என்கிற ராணியின் ஆடையை மையமாக கொண்டதாம். இந்தியாவில் உள்ள உலக அதிசயமான தாஜ் மஹால் முன் ஐஸ்வர்யா ராஜ் ஆடும்போது, ஷாஜகானின் காதலி மும்தாஜ் போல் உடை அணிருந்திருந்தாராம்.

இதையும் படியுங்கள்... சீரியல் நடிகை ரித்திகாவுக்கு வளைகாப்பு... படையெடுத்து வந்து வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்

Jeans Movie Aishwarya Rai

கிசாவில் உள்ள பிரமீடுகள் முன் ஆடுகையில் கிளியோபேட்ரா போல் உடை அணிருந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அதே போல் கொலாசியம் முன் ஆடுகையில் இரண்டாம் இசபெல்லா போல் உடை அணிந்து நடனம் ஆடி இருந்தார் ஐஸ்வர்யா. அதேபோல் பாரிசில் உள்ள பைசா கோபுரம் முன் டான்ஸ் ஆடும் போது குயின் மார்கரிட்டா போல் உடை அணிந்து ஆடினாராம் ஐஸ்வர்யா ராய். இதையெல்லாம் கேட்கும் போது ஐஸ்வர்யா ராயை அந்த பாடலில் 8வது அதிசயமாக காட்டி இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Jeans Movie Aishwarya Rai Dress

பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலை உலகில் உள்ள 7 அதிசயங்களுக்கும் சென்று வெறும் 15 நாட்களில் படமாக்கி முடித்துவிட்டாராம் இயக்குனர் ஷங்கர். அப்பாடலை படமாக்க அந்த காலத்திலேயே பல கோடி செலவு செய்திருக்கிறார். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாடலாகவும் அது இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அதே ஹேர் ஸ்டைல்.. அதே புடவை.. கொஞ்ச நேரம் சமந்தாவாக மாறிய திவ்யா துரைசாமி - கூல் பிக்ஸ்!

Latest Videos

click me!