மறைந்த நடிகை சௌந்தர்யாவின் இடத்தை நிரப்பும் நடிகைகள் இவர்களா?

First Published | Aug 19, 2024, 12:19 PM IST

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் நடிப்பை ரசிக்காதவர்களே இல்லை என கூறலாம். அவரது மறைவை நிரப்பும் நடிகைகள் இவர்கள் தான் என்கிறார் ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு! யார் அவர்கள் தெரியுமா?
 

Soundarya

இந்திய சினிமாவில் 1990களில் கொடிகட்டிப் பறந்து கனவுக்கனியாகவே மறைந்த நடிகை சௌந்தர்யாவின் நடிப்பை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். தென்னிந்தியாவில் கிளாமர் வேடங்களுக்கு வாய்ப்பளிக்காமல் அன்றைய அனைத்து ஸ்டார் ஹீரோயின்களுக்கும் போட்டி கொடுத்து நடித்தவர். குடும்ப பாங்கான கேரக்டர்களில் ஜொலித்த சௌந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்து 20 வருடம் ஆகிவிட்டது.

Soundarya

மறைந்த நடிகை சௌந்தர்யாவுக்குப் பிறகு தனது நடிப்பாலும், ஹோம்லியான தோற்றத்தாலும் குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் கதாநாயகி இதுவரையில் யாரும் இல்லை எனலாம். சௌந்தர்யாவின் இடத்தை சினேகா போன்றவர்கள் நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவரால் நீண்ட நாள் நீடிக்க முடியவில்லை. சௌந்தர்யா அன்றைய அனைத்து நட்சத்திர ஹீரோக்களுடனும் நடித்தார்.
 

Tap to resize

Soundarya

இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஹீரோயின்கள் குறித்து சோட்டா கூறிய கருத்துகள் வைரலாகி வருகிறது. சோட்டா கே நாயுடு பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். சந்தீப் கிஷன் நடித்த எக்கோ தியாரி தப்பா படத்தைப் பற்றிப் பேசும்போது சோட்டாவுக்கு சௌந்தர்யா குறித்து பேசியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் மனைவி யார்? இதனால் தான் தனது குடும்பத்தை பற்றி பேச மறுக்கிறாரா?
 

Soundarya - Chota K Naidu

ஒரு படத்திற்காக பல ஹீரோயின்களிடம் கேட்டோம். யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. கதையில் கதாநாயகியின் பாத்திரத்தின் முக்கியத்துவம் யாருக்கும் புரியவில்லை. ஆனால் நித்யா மேனனின் கதையைக் கேட்டதும் அவர் ஒப்புக்கொண்டார். கதாநாயகியின் முக்கியத்துவத்தை உணரும் திறமை நித்யா மேனனுக்கு உண்டு.

சூர்யாவுடன் மோதலை உறுதி செய்த ரஜினிகாந்த்; 'வேட்டையன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
 

Samantha - Nithya Menon

நான் பணியாற்றிய கதாநாயகிகளில் சௌந்தர்யா ஒரு அதிசயம். அவருக்கு பிறகு அந்த லெவல் ஹீரோயின்கள் யார்? என கேட்டபோது. சமந்தா தங்கம். அதையடுத்து நித்யா மேனன் என்றார். சமந்தா தங்கம் ஆனால் நித்யா மேனன் பிளாட்டினம் என்று சோட்டா கே நாயுடு பாராட்டினார்.
 

Nithya Menon - Soundarya - Samantha

ஆனால் சோட்டாவின் கருத்துகள் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சௌந்தர்யாவுடன் நித்யா மேனனை ஒப்பிடுவதும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் சமந்தாவை ஒப்பிடுவதை ட்ரோல் செய்கின்றனர். சமந்தாவின் ஸ்டைல் ​​முற்றிலும் வித்தியாசமானது என்றும், இருவரையும் ஒப்பிட முடியாது என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர்.
 

Latest Videos

click me!