அக்கா ஜான்வியை தொடர்ந்து... முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட குஷி கபூர்!

First Published | Aug 19, 2024, 1:11 PM IST

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் போலவே, தங்கை குஷி கபூரும் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு அழகாக மாறியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Sridevi

நடிகை என்பதின் முதல் அடையாளம், அவர்களின் மயக்கும் அழகு தான். எனவே சமீப காலமாக தங்களை அழகாக மாற்றி கொள்ள பல நடிகைகள், அறுவை சிகிச்சை செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த காலத்திலேயே அமெரிக்காவுக்கு சென்று தன்னுடைய மூக்கு பகுதியை அழகாக மாற்றி கொண்டவர் தான் நடிகை ஸ்ரீதேவி என்பது அனைவரும் அறிந்ததே.
 

Janhvi Kapoor

ஸ்ரீதேவி இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய, '16 வயதினிலே' திரைப்படத்திற்கு பின்னர் அடுத்தடுத்த... படங்களில் நடிக்கும் போது, இவரது மூக்கு மட்டும் கொஞ்சம் தட்டையாக... எடுப்பாக இல்லை என கூறப்பட்டது. இது சில ஆங்கிளில் கேமராவில் படம்பிடிக்கும் போது இவரின் அழகை குறைத்து. எனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டு மூக்கை மெல்லியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்றிக் கொண்டார். அம்மாவை தொடர்ந்து ஜான்வி கபூரும் தன்னுடைய மூக்கை அழகாக மாற்றி கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்டு கவர்ச்சிகரமாக மாற்றினார்.
 

Tap to resize

Janhvi Kapoor Cosmetic Surgery

ஜான்வி கபூரின் டீன் ஏஜ் புகைப்படங்களை பார்க்கும் போது... அவரின் பழைய தோற்றத்திற்கும், தற்போதைய தோற்றத்திற்குமான வித்தியாசத்தை பார்க்க முடியும். ஜான்வி ஒரு நடிகையாக வேண்டும் என முடிவுக்கு வந்த உடனேயே, தன்னுடைய மூக்கை சரி செய்து கொண்டார்.

Khushi Kapoor:

அக்காவை தொடர்ந்து, தங்கை குஷியும் பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்படி, குஷி 'ஆர்ச்சிஸ்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். நடிகையாவதால், தன்னுடைய அக்கா பாணியிலேயே மூக்கு மற்றும் முகத்தின் தாடை எலும்பு விரிவுபடுத்தும் சில காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் குஷி கபூர். 

Janhvi And Khushi Kapoor

இதற்கிடையில், குஷி கபூர் அழகுக்காக அறுவை சிகிச்சை குறித்து அவரிடமே சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆம், நான் அழகு சிகிச்சை செய்து கொண்டேன் என உடைத்து பேசியுள்ளார். சில நடிகைகள் அப்படியெல்லாம் இல்லை என பூசி மெழுகும் நிலையில், குஷியின் இந்த நேர்மையான பதில் பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

Khushi Kapoor Beats Janhvi

ஆனால் ஜான்வி கபூர் பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சையில் சிக்கியபோது... அவர் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வி ஒரு நடிகையாக அறிமுகமாகி ஜெயித்து விட்டநிலையில், தங்கை குஷியும் வெற்றிவாகை சூடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!