ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாட்களில் காலி செய்த டிமாண்டி காலனி 2

First Published | Aug 19, 2024, 2:21 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி 2 திரைப்படம் ரஜினிகாந்த் படத்தின் லைஃப் டைம் வசூலை நான்கே நாட்களில் தட்டிதூக்கி இருக்கிறது.

Demonte Colony 2

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து. அவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டிமாண்டி காலனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை உடன் வித்தியாசமான பேய் படமாக டிமாண்டி காலனி 2 உருவாகி இருந்தது. அப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாஸ் வெற்றியை ருசித்தது.

Demonte Colony 2 Arulnithi

டிமாண்டி காலனி படத்தின் வெற்றிக்கு பின்னர் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து. அப்படமும் ஹிட் ஆனதை தொடர்ந்து அவருக்கு விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டார் அஜய் ஞானமுத்து. அவர் விஜய்யை சந்தித்தபோது பதற்றத்தில் சரியாக கதை சொல்லாததால் அந்த வாய்ப்பு கை நழுவி போனது. அதன் பின்னர் தான் விக்ரம் உடன் கூட்டணி அமைத்தார் அஜய்.

இதையும் படியுங்கள்... தங்கையுடன் அஜித் மனைவி ஷாலினி கொண்டாடிய வரலட்சுமி நோம்பு! வைரலாகும் புகைப்படங்கள்!

Tap to resize

Demonte Colony 2 Box Office

விக்ரமை வைத்து அவர் இயக்கிய கோப்ரா திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த அஜய், டிமாண்டி காலனி 2 படத்தை கையிலெடுத்தார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறையில் விக்ரமின் தங்கலான் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது.

Demonte Colony 2 Beats Lal Salaam TN Collection

ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஏறுமுகமாக சென்றுகொண்டிருக்கும் டிமாண்டி கலானி 2 திரைப்படம் நான்கு நாட்களில் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.16 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் ரஜினியின் லால் சலாம் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை டிமாண்டி காலனி 2 முறியடித்துள்ளது. ரஜினியின் லால் சலாம் திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.15 கோடி கூட வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அஜித்துடன் மோதி ஜெயிக்க முடியுமா? பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி உடன் டிடிஎப் வாசனின் மஞ்சள் வீரன்?

Latest Videos

click me!