“நான் பீப் சாப்பிடுறதுல்ல என்ன பிரச்சனை” நடிகை துஷாரா விஜயன் வீடியோ மீண்டும் வைரல்!!

First Published | Aug 19, 2024, 4:20 PM IST

நடிகை துஷாரா விஜயன் பீப் சாப்பிடுவது குறித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

Dushara Vijayan

2019-ம் ஆண்டு வெளியான போதையேறி புத்திமாறி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் துஷாரா விஜயன். இதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் துஷாரா. மாரியம்மா என்ற கேரக்டரின் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய துஷாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. 

Dushara Vijayan

இதை தொடர்ந்து மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் ரெனே என்ற கேரக்டரில் நடித்து மீண்டும் கவனம் ஈர்த்தார் துஷாரா. தொடர்ந்து கழுவேத்தி மூக்கன், அநீதி ஆகிய படங்களில் நடித்தார்.

ஒரு படத்திற்கு ரூ.280 கோடி! ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் இவர் தான்!

Tap to resize

Dushara Vijayan

கடைசியாக தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் படத்தில் துஷாரா நடித்திருந்தார். டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் வீர தீர சூரன் படித்தில் நடித்து வருகிறார். 
 

Dushara Vijayan

தனது 35-வது நடிப்பை விட்டு விலகி விடுவேன் என்று சமீபத்தில் துஷாரா கூறியிருந்தார். இந்த நிலையில் பீப் கறி சாப்பிடுவது குறித்து துஷாரா பேசிய வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய அவர் “ சிக்கன் சாப்பிடுற மாதிரி பீப் சாப்பிடுறேன்.. தயிர் சாதம் சாப்பிடுபவர்களிடம் ஏன் தயிர் சாதம் சாப்பிடுறீங்க என்று கேட்குறோமா? ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி வாழ்கின்றனர். தயிர் சாதம் சாப்பிடுற மாதிரி நான் பீப் சாப்பிடுறேன்.. இதுல என்ன பிரச்சனை இருக்கு.. அதை ஏன் ஒரு பிரச்சனையா கேட்குறீங்க..

இதெல்லாம் ஒரு மூஞ்சியா? 25 முறை ரிஜெக்ஷன்ஸ்... வலிகள் நிறைந்த ராஷ்மிகாவின் திரையுலக பின்னணி!

Dushara Vijayan

நட்சத்திரங்கள் நகர்கிறது நான் நடித்த ரெனே கேரக்டர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தது. நிறைய இடங்களில் பீப் குறித்த பிரச்சனை இருக்க தான் செய்கிறது. ஒரு சமூக பொறுப்புள்ள நபராக இதை பற்றி பேச எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் இயக்குனர் சொன்னதை தான் செய்தேன் என்று கூறி நான் தப்பிக்க விரும்பல.. நான் அந்த கேரக்டரில் நடித்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். சந்தோஷப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். 

Latest Videos

click me!