தனுஷை அசிங்கப்படுத்த நீலாம்பரியாக மாறி; கல்யாண வீட்டில் நயன்தாரா செய்த கலாட்டா!

First Published | Nov 24, 2024, 11:11 AM IST

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் கலந்துகொள்ள வந்த நயன்தாரா, தனுஷுக்கு எதிராக பல செயல்களை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Nayanthara vs Dhanush

கோலிவுட்டில் கடந்த ஒரு வாரமாக ஹாட் டாப்பிக் ஆக இருப்பது தனுஷ் - நயன்தாராவின் சண்டை தான். தன்னுடைய ஆவணப்படத்தில் நயன்தாரா நானும் ரெளடி தான் படத்தின் 3 செகண்ட் காட்சியை வைத்துள்ளதால் அதற்கு தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்ப, அதனால் கொந்தளித்த நயன்தாரா தனுஷை தாக்கி மூன்று பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த அறிக்கைக்கு தனுஷ் இதுவரை எந்தவித ரிப்ளையும் கொடுக்கவில்லை

Nayanthara at Aakash Bhaskaran wedding

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ், நயன்தாரா இருவருமே கலந்துகொண்டனர். அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இவர்கள் இருவருக்குமே ஆகாஷ் பாஸ்கரன் நெருங்கிய நண்பர் என்பதால் தனுஷ், நயன்தாரா இருவருமே இந்த திருமண விழாவில் கலந்துகொண்டனர். 

Tap to resize

Dhanush at Aakash Bhaskaran Wedding

தனுஷ் நடித்து வரும் இட்லி கடை படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரிக்கிறார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சில படங்களில் உதவி இயக்குனராகவும் ஆகாஷ் பாஸ்கரன் பணியாற்றி உள்ளாராம். தற்போது அதர்வாவை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கி வருவதாகவும், அப்படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகாஷ் பாஸ்கரன் அவதாரம் எடுக்க உள்ளாராம். 

இதையும் படியுங்கள்... சண்டைக்கு பின் தனுஷ் - நயன்தாரா இடையே நடந்த எதிர்பாரா சந்திப்பு! வீடியோ இதோ

Vignesh Shivan, Nayanthara

இப்படி தனுஷ், நயன்தாரா இருவருக்குமே ஆகாஷ் பாஸ்கரன் நெருங்கிய நண்பர் என்பதால் இருவருமே அவர் திருமணத்தில் கலந்துகொண்டனர். அப்போது வெளிவந்த வீடியோவும் ஏதோ எதர்ச்சியாக வெளியானது என்று அனைவரும் நினைத்து வந்தனர். ஆனால் அதெல்லாம் திட்டமிட்டு எடுக்கப்பட்டது என வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.

Aakash Bhaskaran Marriage Photos

ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தனுஷ், நயன்தாரா இருவருமே வருகிறார்கள் என்பது தெரிந்ததும், தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் அருகருகே இருக்கை ஒதுக்காமல் சற்று தள்ளி தள்ளியே ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா வந்த வேகத்தில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியிடம் பேசியபடி தனுஷ் அருகில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்தார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் தான் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறிவிட்டு, தனுஷ் அருகில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறார் நயன்.

Aakash Bhaskaran Wedding Photos

அதுமட்டுமின்றி தான் படையப்பா நீலாம்பரி போல் அமர்ந்திருப்பதை வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கியதும் நயன்தாராவின் ஆட்கள் தானாம். தனுஷை அசிங்கப்படுத்தவே அவர் இதுபோன்ற செயலை செய்ததாக கூறப்படுகிறது. கல்யாண வீட்டில் நயன்தாரா செய்த இந்த கலாட்டாவால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... நயன்தாராவின் ‘லக்கி சார்ம்’ விக்கியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos

click me!