தியேட்டரில் கூட்டமில்லை; ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பப்படும் கங்குவா! எப்போ ரிலீஸ்?

First Published | Nov 24, 2024, 9:55 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த கங்குவா திரைப்படம் தியேட்டரில் வரவேற்பு இல்லாததால் ஓடிடிக்கு செல்ல உள்ளதாம்.

Kanguva

தமிழ் சினிமாவில் 2024-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் கங்குவாவும் ஒன்று. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் கடந்த நவம்பர் 14-ந் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா படமாக கங்குவாவை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தனர். கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமாக கங்குவா இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவையெல்லாம் அப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே தவிடுபொடி ஆனது.

kanguva Suriya

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன கங்குவா திரைப்படம் அதன் சொதப்பலான திரைக்கதை காரணமாக படம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதுமட்டுமின்றி படம் முழுக்க அதிக ஒலி இருந்ததால் ரசிகர்கள் காது வலிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இப்படம் இந்த அளவுக்கு விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்ததற்கு காரணம் ரிலீஸுக்கு முன்னர் படத்தை பற்றி படக்குழு கொடுத்த பில்டப் தான்.

Tap to resize

Kanguva Movie

குறிப்பாக நடிகர் சூர்யா, படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்று கூறி இருந்தார். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படம் 2000 கோடி வசூலிக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார். அதுமட்டுமின்றி படத்தின் ஆடியோ லாஞ்சின்போது அங்கு வந்திருந்த ரசிகர்களிடம் கங்குவா படத்தின் வெற்றிவிழா டிசம்பர் மாதம் இதே நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் அப்போ, இந்த நுழைவுச் சீட்டுடன் வந்து கலந்துகொள்ளுங்கள் என்றெல்லாம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே கங்குவாவின் வசூலை தாண்டிய புஷ்பா 2 - மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!

Kanguva OTT Release

இதையெல்லாம் நம்பி தான் ரசிகர்கள் படத்தை பார்க்க சென்றனர். ஆனால் அவர்கள் கொடுத்த ஹைப்புக்கு படம் ஒர்த் ஆக இல்லாததால் அப்செட் ஆகி கடுமையாக ட்ரோல் செய்துள்ளனர். கங்குவா படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் தியேட்டரில் ரிலீஸ் ஆகி முதல் நாளில் மட்டும் நல்ல வசூலை வாரிக்குவித்த கங்குவா, அடுத்தடுத்த நாட்களில் கடும் சரிவை சந்தித்தது. இதனால் ஒரு வாரத்திலேயே பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுள்ளது கங்குவா.

Kanguva OTT Release Update

அதற்கு பதிலாக இந்த வாரம் திரைக்கு வந்துள்ள நிறங்கள் மூன்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் அதை திரையிட்டு வருகின்றனர். இப்படி தியேட்டரில் வாஷ் அவுட் ஆன கங்குவா திரைப்படத்தை வேறு வழியின்றி ஓடிடிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்படத்தின் இந்தி வெர்ஷன் தவிர்த்து மற்ற மொழிகளில் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்தி வெர்ஷன் மட்டும் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் ஆகும். இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சூர்யாவை நம்பி கோடிக் கணக்கில் பணம் போட தயங்கும் தயாரிப்பாளர்கள் – டிராப்பாகும் ரூ.600 கோடி கர்ணா?

Latest Videos

click me!