ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன சாச்சனா; பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவரா?

Published : Nov 24, 2024, 07:40 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் 7-வது வார முடிவில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர் யார் என்கிற விவரம் லீக் ஆகி உள்ளது.

PREV
14
ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன சாச்சனா; பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவரா?
Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய ஐந்து பேர் இதுவரை எலிமினேட் ஆகி உள்ளனர். இதுதவிர 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளதால் தற்போது 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

24
Bigg Boss Tamil season 8 Contestants

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸே இந்த பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற நடைமுறையை கைவிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஒரே வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த 2 காதல் - யார் அந்த ஜோடி புறாக்கள் தெரியுமா?

34
Sachana

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், வீட்டில் கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால் இனி வரும் வாரங்களில் டபுள் எவிக்‌ஷன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் ஒரு நபர் மட்டுமே எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த வார நாமினேஷனில் மொத்தம் 13 பேர் சிக்கி இருந்தனர். அதில் கம்மியான வாக்குகளை வாங்கி இருந்தது ஷிவகுமார் தான். ஆனால் அவர் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்றதால் இந்த வாரம் எஸ்கேப் ஆகிவிட்டார்.

44
Varshini Venkat

இதற்கு அடுத்தபடியாக டேஞ்சர் ஜோனில் இருந்த போட்டியாளர்கள் என்றால் அது ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, வர்ஷினி வெங்கட் மற்றும் தர்ஷிகா தான். இதில் சாச்சனா கடந்த வாரம் சண்டைக்கோழியாக வலம் வந்ததால் அவர் எலிமினேஷனில் இருந்து கடைசி நேரத்தில் தப்பித்துவிட்டார். இதனால் அவரைவிட கம்மியான ஓட்டுகளை வாங்கிய வைல்டு கார்டு போட்டியாளர் வர்ஷினி வெங்கட் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி இருக்கிறார். இதனால் இந்த வாரம் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்துள்ளார் சாச்சனா.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் வரலாற்றிலேயே கம்மி சம்பளத்தோடு எலிமினேட் ஆன ரியா; அதுக்குன்னு இவ்வளவுதானா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories